நடிகர் விஷால் அலுவலகத்தில் ரெய்டு

நடிகர் விஷாலுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் சென்னை வடபழனியில் உள்ளது.இந்த அலுவலகத்திற்கு இன்று பிற்பகல் வந்த மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் திடீர்சோதனையில் ஈடுபட்டனர். திரைப்பட நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு வழக்குகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.

விஷாலின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை. மத்திய கலால் துறையின்கீழ் செயல்படும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விஷாலின் தயாரிப்பு நிறுவன ஜிஎஸ்டி முறையாக செலுத்தப்பட்டதா என ஆய்வு செய்தனர்.