நடிகர் ராஜ்கிரன் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த பண்பாளரும் கூட

நடிகர் ராஜ்கிரன் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த பண்பாளரும் கூட என்பது திரையுலகம் சார்ந்த அனைவருக்குமே தெரிந்த விடயம். அவர் பணம் சம்பாதிப்பதில் கூட நேர்மையை கடைப்பிடிப்பவர் என்பது செய்திகள் கூடாக நாம் அறிந்து கொண்டவை.

ஒரு தடவை அவரிடம் பிரபல வேஸ்டி (வேட்டி) தயாரிக்கும் நிறுவனம் தங்கள் விளம்பரத்தில் தோன்றி நடிக்கும் படியும் இலட்சக்கணக்கில் ஊதியம் தரலாம் என்றும் வேண்டிக் கொண்டதாம்.

ஆனால் அதற்கு மறுத்த நடிகர் ராஜ்கிரன், “அநேகமாக வேட்டி அணிபவர்கள் ஏழைகளே! எனக்கு விளம்பரம் செய்வதற்காக நீஙகள் தரும் பணத்தை அந்த ஏழைகளிடமிருந்தே நீங்கள் “கறக்கப்” பார்ப்பீர்கள். எனவே நான் இந்த வேண்டுகோளுக்கு சம்மதிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டாராம்.

மேற்படி நடிகர் ராஜ்கிரன் சாதாரண இந்தியப் பிரஜைகள் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் மீது மட்டுமல்ல இலஙகைத் தமிழர்கள் மீதும் தீராத பற்றுக்கொண்டவர்.
அண்மையில் நடிகரம் ராஜகிரன் சென்னையில் பத்திரிகையாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியில்
“ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் தொடர்ந்து தமிழக அரசியல்வாதிகளை நீஙகள் விமர்சனம் செய்வது ஏன்” என்று கேட்டபோது……..
அதற்கு நடிகர் ராஜ்கிரன் சிரித்துக் கொண்டே அளித்த பதில்
“தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களுக்காகப் போராடுகின்றோம் என்று சொல்லிக்கொள்கினற அரசியவாதிகள் எல்லாம், அவரவர் கட்சியை வளர்த்துக் கொள்ளவும், வசூல் செய்யவும் தான் இருக்கின்றார்கள்.ஏனென்றால் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எல்லாம் அப்பாவிகள் இங்கு ஈழத்துக்ககாக ஒருவன் குரல் கொடுக்கிறேன் என்றால், வங்கி ட்ராப் எடுத்து உடனேயே பணத்தை அனுப்பிவிடுகின்றார்கள் .அதற்காகவே போராடுகினறோம் என்று சொல்லி இவர்கள் வேசம்–வேடம் போடுகின்றார்கள். பிறகு 500 கோடி 1000 கோடி என்று சேர்த்து செட்டில் ஆகிவிடுகின்றார்கள். ஈழத்தமிழர்களுக்காக உண்மையாகவும் உணர்வோடும் இவர்கள் போராடுவதில்லை.” என்றார்