நடிகர் கமல்ஹாசன் முதுகெலும்பற்ற கோழை’ பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா விளாசல்

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா கூறியதாவது:-

முதல்வர் கனவு காண கமல்ஹாசனுக்கு உரிமை உண்டு. இதை மறுப்பதற்கு எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். நாட்டில் இருக்கிற மக்கள்தொகையில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும், அரசியலில் வருவதற்கும் கட்சி ஆரம்பிக்கவும் உரிமை இருக்கிறது. அந்தமாதிரி கமல்ஹாசனுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், முதல்வர் பதவியில் உட்காருபவர் எப்படி இருக்க வேண்டுமென்றால், அச்சமில்லாமல் முதுகெலும்போடு செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும்.

விஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தபோது அழுது, புலம்பி இந்த நாட்டை விட்டே ஓடிப்போகப்போகிறேன் என்று சொன்ன கமல்ஹாசன் ஒரு முதுகெலும்பில்லாத கோழை. அவர் நாளை முதலமைச்சரானால் தமிழ்நாட்டோட கதி என்னவாகும். அது மிகப்பெரிய கேள்விக்குறி. அவர் ட்வீட்டில் முடிவெடுத்தால் முதல்வர் என்கிறார். முடிவு எடுத்தாலும் இவரால் ஒருக்காலும் முதல்வராக வர முடியாது. காரணம் முதுகெலும்பற்ற ஒரு கோழையை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.