நடமாடும் எம்.எல்.ஏ அலுவலகம் செயல்படுத்தப்படும் ஓ.பிஎஸ் அணி தேர்தல் அறிக்கை வெளியீடு

அதிமுக பரட்சிதலைவி அம்மா அணி சார்பில் ஆர்.கே.நகரில் தேர்தல் பணிமனை திறக்கபட்டது.பின்னர் ஆர்.கே.நகர் தேர்தல் தேர்தல் அறிக்கை வெளியிடபட்டது.

அதிமுக பரட்சிதலைவி அம்மா அணி சார்பில்  108 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டார்.

* இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும் *  ஜெயலலிதா இல்லம் நினைவிடமாக்கப்படும் * நடமாடும் எம்.எல்.ஏ அலுவகம் செயல்படுத்தப்படும்* ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த நடவடிக்கை * எழில் நகர் பகுதியில் சுற்றுலா மையம் அமைக்கப்படும்.

* ஆர்.கே.நகர் தொகுதியில் பெண்களை தொழில் முனைவோர் ஆக்க நடவடிக்கை*ஆர்.கே.நகரில் உள்ள அரசு கல்லூரி உலக தரத்துக்கு மாற்றப்படும் * அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து வசதி உருவாக்க முயற்சி.* மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு பயிற்சி தந்து வேலை கிடைக்க ஏற்பாடு* பொதுத்துறை வங்கிகள், நூலக வசதி ஏற்படுத்தப்படும்

* அனைவருக்கும் பட்டா, தடையின்றி மின்சாரம், பாதுகாப்பான குடிநீர் தரப்படும். * மேலும் 2 உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி அமைக்க நடவடிக்கை * ஆரம்ப சுகாதார மையங்களில் போதிய மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை * முதியோருக்கு ஓய்வூதியம் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் * தரமான சாலை, பாதுகாப்பான சாக்கடை வசதிகள் செய்து தரப்படும் * பட்டா இல்லாதவர்களுக்கு ஒவ்வொரு கட்டமாக பட்டா தரப்படும்.

* ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்கான பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.* 2500 குடும்பங்களுக்கு ஒரு ரேஷன் கடை என்ற நிலையை மாற்றி 500 குடும்பங்களுக்கு ஒரு ரேஷன் கடை அமைத்து தரப்படும் * தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் * தொகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்