நடனச் செல்வி டெனிசியா பறறிக் அவர்களின் பரதநாட்டிய அரஙகேற்றம்

கனடா மிசிசாகா நகரில் அமைந்துள்ள மெடோவேல் தியேட்டர் மண்டபத்தில் நடைபெற்ற நடனச் செல்வி டெனிசியா பறறிக் அவர்களின் பரதநாட்டிய அரஙகேற்றம் மிகவும் சிறப்பாக நிறைவுறும் வரையில் நகர்ந்து சென்றது.
சிலம்பொலி சேஸ்த்திர நாட்டியப் பள்ளியின் ஸ்தாபகர் மற்றும் முதன்மைக் குரு ஶ்ரீமதி ஜனனி குமார் அவர்களின் மாணவியான நடனச் செல்வி டெனிசியா பற்றிக் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக தனது குருவிடம் கற்ற வித்தைகளையும் நடன நுட்பங்களையும் இன்று மண்டபத்தை நிறைத்திருந்த சபையோர் முன்பாக சமர்பபித்தார்.
தமிழ் மொழி அறிவிப்பாளராக “தமிழழகன்” மதியழகன் பணியாற்றினார். ஆங்கில அறிவிப்பாளராக பணியாற்றிய செல்வி Yaalini Vijayakumar யும் சிறப்பாக தனது ப ணியைச் செய்தார்.
சிலம்பொலி சேஸ்த்திர நாட்டியப் பள்ளியின் ஸ்தாபகர் மற்றும் முதன்மைக் குரு ஶ்ரீமதி ஜனனி குமார் மற்றும் அவரது புதல்வியும் சிரேஸ்ட மாணவியுமான செல்வி தாமிரா குமார் ஆகியோர் நட்டுவாங்கம் செய்ய, ஏனைய புகழ்பெற்ற பக்கவாத்தியக் கலைஞர்கள் பக்க பலமாக இசை வழங்க, டெனிசியாவினது பாதங்கள் மேடையில் பக்குவமாக அடியெடுத்து வைக்க முகத்தில் பாவங்கள் அசைந்தும் நெளிந்தும் செல்ல விரல்கள் முத்தான முத்திரைகளை பதித்து விளங்க, அரங்கேற்றத்தின் ஒவ்வொரு உருப்படியும் அழகுற நகர்ந்து சென்றது.
அரங்கேற்றத்திற்கு பிரதம விருந்தினராக கலாநிதி இ. பாலசுந்தரம் அழைககப்பட்டிருந்தார். சிறப்பு விருந்தினர்களாக திருவாளர்கள் (உதயன்) லோகேந்திரலிங்கம், (தமிழ் மிறர்) சார்ள்ஸ் தேவசகாயம் ஆகியோர் அழைக்கபபட்டிருந்தனர்.அவர்களது உரைகளும் இடம்பெற்றன.
டெனிசியாவின் தந்தை திரு பற்றிக் அன்ரனி அவர்கள் திருகோணமலையை பிறப்பிடமாகக் கொண்டவர், தாயார் செந்தினி யாழ்பபாணம் திருநெல்வேலியைப் பிறபபிடமாகக் கொண்டவர் எனவே இந்த இரண்டு ஊர்களையும் சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டமை, அரங்கேற்றத்தை ஒரு அட்டகாசமான விழாவாக உயர்த்தியது என்றால் அது மிகையாகாது.