நடனச் செல்வி கஸ்மியா பாலபாஸ்கரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

Kalai Aruvi Academy of Fine Arts presented “Selvi” Kashmia Balabaskaran’s Bharathanatya Arangetram today at Armenian Youth Center Auditorium.  Kashmia Balabaskaran was gifted to have her Guru Mrs Renuka Vigneshwaran on his Dance Journey and today’ Accomplished Artists . There music was fantastic. Mr. Ragavan Paramsothy did his excellent job as the MC for tonight.

கனடாவில் இயங்கிவரும் கலை அருவி நுண்;கலைக் கல்லூரியின் அதிபர் திருமதி ரேணுகா விக்கினேஸ்வரன் அவர்களின் மாணவியும் திரு. திருமதி பாலபாஸ்கரன் தம்பதியின் புதல்வியுமான நடனச் செல்வி கஸ்மியா பாலபாஸ்கரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் சனிக்கிழமை மாலை ஸ்காபுறோ ஆர்மேனியன் இளைஞர் கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பரதநாட்டியச் செல்வி கஸ்மியாவின் ஒவ்வொரு உருப்படியும் சபையோரை பிரமிக்கச் செய்தது. அவரது குரு கலை அருவி நுண்;கலைக் கல்லூரியின் அதிபர் திருமதி ரேணுகா விக்கினேஸ்வரன் அவர்கள், மேடையில் மிகுந்த உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் தனது மாணவியின் நடன ஆறறலை கண்டு அவரைப் பாராட்டிய வண்ணம இருக்க அரங்கேற்றம் மிகவும் சிறப்பாக நகர்ந்து சென்றது.

அழகியதும் பக்கவாத்திய இசையும் பாடல்களும் உரைகளும் அத்துடன் மிகுந்த உச்ச நிலை உபசாரமும் இரவு விருநந்தும் அடங்கியதாக இருந்த அரங்கேற்றம் இடம்பெற்ற அரங்கத்தை விட்டு விலக மனமில்லாமல் சபையோர் ஒவ்வொருவராக இல்லம் ஏகிச் சென்றனர்.