தோல்வி பயத்தின் காரணமாகவே தேர்தல் ஆணையத்தில் தினகரன் புகார் – ஓ. பன்னீர்செல்வம்

தோல்வி பயத்தின் காரணமாகவே தேர்தல் ஆணையத்தில் தினகரன் புகார் அளித்துள்ளார் மதுசூதனை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

ஓ.பன்னீர் செல்வம் அனியின் அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணியின் வேட்பாளர் இரட்டை மின்கம்பம் சின்னத்தை  இரட்டை இலையாக்கிவிட்டனர் என தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஓ.பன்னீர் செல்வத்திடம் நிருபர்கள் கேட்டனர் அதற்கு பதில் அளித்த ஓ. பன்னீர் செல்வம்.தோல்வி பயத்தின் காரணமாகவே தேர்தல் ஆணையத்தில் தினகரன் புகார் அளித்துள்ளார். எங்கள் வெற்றி வேட்பாளர் மதுசூதனன் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்என கூறினார்.