தொல்லை தரும் மூத்த தலைவர்கள்:சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ. கதறல்

மூத்த தலைவர்கள் தொல்லை தருகின்றனர்,தனது குடும்பத்தினர் மீது போலீசார் பொய் வழக்கு பதிந்து துன்புறுத்துவதாக சட்டசபையில் கண்ணீர்விட்டு அழுதார் பெண் எம்.எல்ஏ.,
மத்திய பிரதேசத்தில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் உள்ளார். சிமாரியா தொகுதி பா.ஜ. பெண் எம்.எல்.ஏ. நீலம் அபய் மிஷ்ரா. இன்று சட்டசபை கூட்டத் தொடரின் பூஜ்ஜிய நேரத்தின் போது, எழுந்து நின்று, தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் கட்சியின் முக்கிய தலைவர் துன்புறுத்தல் கொடுக்கின்றனர். போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுகின்றனர். என்ற கூறியபடி கதறி அழதார்.
இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. பெண் எம்.எல்.ஏ.யின் அழுகையை பார்த்து பொங்கியெழுந்த , எதிர்க்கட்சியான காங் எம்.எல்.ஏ.க்கள் அபய் மிஷ்ராவுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். பெண் எம்.எல்.ஏ.வுக்கு மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை என்றால், பொதுமக்களின் நிலை என்ன? சட்டசபையில் கோஷம் எழுப்பினர்.
உடன் உள்துறை அமைச்சர் எழுந்து பேசினார். அப்போது, அபய் மிஷ்ராவின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தார். பெண் எம்.எல்.ஏ.வின் கதறல் சம்பவம் அவையை சிறிது நேரம் ஒத்திவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.