தைவானுடன் இந்தியா வர்த்தக பேச்சு துவக்கும் : சீனாவுக்கு அடி

தைவானுடன் வர்த்தக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இரு நாடுகளுடனும், சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவை, தைவான் அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி அது உலக வர்த்தக அமைப்பில் பதிவானால், சீனாவின் அதிருப்திக்கு ஆளாகும் எனக்கருதி, அதனை மத்திய அரசு ஏற்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போது, தைவானுடன் வர்த்தகரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது, இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறையில் அதிகளவு முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தை குறித்து இறுதி முடிவு எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை.