தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சாரப் பதாகைகள் (signs) எவ்வித சேதமுமின்றி, வீதி ஓரங்களில், எங்கள் கண்களுக்கு தெரியும் வண்ணம் காணப்பட வேண்டும்

கனடாவின் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ம் திகதி நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் உள்ள கட்சி வேட்பாளர்களும் அவற்றின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரங்களில்டி ஈடுபட்டு வருகின்றார்கள். எங்கு பார்த்தாலும் கலந்துரையாடல்களும் கருத்தரங்குகளும் என பிரச்சாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இவ்வாறான நேரத்தில் எமது தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சாரப் பதாகைகள் சில இடங்களில் கோரத்தனமாக சேதப்படுத்தப்பட்டு வீதிகளில் வீழ்ந்து கிடந்தன. தனது வேட்பாளரின் எழுச்சிக்காக நாட்டப்பட்ட அந்த பதாகைகள் வெட்டி வீழ்த்தப்பட்டு கிடந்தன.
இதன்காரணமாக எமது கனடா உதயன் முகநூலில் வெட்டி வீழ்த்தப்பட்ட பதாகைகள் புகைப்படங்களையும் பிரசுரித்து ஒரு அறிக்கையை எழுதியிருந்தோம். அதில் எமக்கு எவ்விதமாக சுயநலமும் இருக்கவில்லை. மாறாக ஒரு சமூக அக்கறை இருந்தது. எமது கண்களுக்கு லிபரல் கட்சியின் வேட்பாளர் திரு ஹரி ஆனந்தசங்கரியின் கால்கள் வெட்டப்பட்டு கிடப்பது போன்ற ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டது. அதன் காரணமாக பின்வருமாறு எமது அறிக்கையை எழுதினோம். மேலும் படிக்க…