தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் றட்ணஜீவன் கூல் தொடர்பில் ஆராயும்படி மல்லாகம் நீதவான் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூல் ஒரு கட்சிசார்பாக செயற்படுவதாகவும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ{ம் நீதிமன்றமும் பொலிஸாரும் உடன்பாட்டுடன் இயங்குகின்றனர் என்ற பொருள்பட பத்திரிகையில் கட்டுரை எழுதியமை தொடர்பாகவும் விசாரணை செய்ய வேண்டும் என மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை பிறப்பித்துள்ளது இந்த றட்ணஜீவன் கூல் என்பவர் கடந்த காலங்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக வருவதற்கும் முயன்றவர் என்பதும் தற்போது எம்பி சுமந்திரன் அவர்களின் சிபார்சின் பேரிலேயே இந்த நியமனத்தைப் பெற்றுள்ளார் என்பதும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகியுள்ள தகவல்களின் மூலம் பெறப்பட்டவையாகும்.

இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையானது மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் தனது தேர் தல் பரப்புரைக் கூட்டத்தை நடத்தியதாக இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர் சோம சுந்தரம் சுகிர்தன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

இவ் வழக்கின் மீதான விசாரணையானது கடந்த 11ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றில் இடம்பெற்ற போது, தேர்தல்கள் தொடர்பான செயற்பாட்டிற்கு ஆலயங்களைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என ஆலயத்தின் பிரதம குருவிற்கு மன்றானது அறிவுறுத்தியிருந்தது.
எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான றட்ண ஜீவன் íல், குறித்த சம்பவம் தொடர்பாக காங்கேசன் துறைப் பொலிஸார் முறையாக விசாரணை நடத்தவில்லை என வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருந்தார்.
இதனையடுத்து இது தொடர்பாக காங்கேசன் துறைப் பொலிஸார் மீண்டும் மேலதிக விசா ரணை அறிக்கை ஒன்றை மல்லாகம் நீதி மன்றில் தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கு ஏற்ப புதன்கிழமையன்று குறித்த வழக்கானது மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அன்றைய வழக்கு விசாரணையின் போது, ஆலய குருக்களின் சார்பாக சட்டத்தரணி சுகாஸ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வேட்பாளரான சட்டத்தரணி மணிவண்ணன் சார்பாக, சட்டத்தரணி கே.குருபரன், சட்டத் தரணி காண்டீபன் உள்ளிட்ட பன்னிரண்டு சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.
மேலும் காங்கேசன்துறை பொலிஸாரும் முறைப்பாட்டாளரான தமிழரசு கட்சியின் வேட்பாளர் சுகிர்தன் ஆகியோரும் முன்னிலை யாகியிருந்தனர். எனினும் தேர்தல் ஆணைக் குழு உறுப்பினர் றட்ண ஜீவன் கூல்; முன் னிலையாகவில்லை.
இதன்போது காங்கேசன்துறை பொலி ஸார் குறித்த சம்பவம் தொடர்பாக தாம் தெளிவாக விசாரணை நடத்தியதாகவும், இவர் கள் உள்;ராட்சி தேர்தல்கள் சட்டத்தை மீறும் வகையில் செயற்படவில்லை எனவும் மன் றுக்கு தெளிவுபடுத்தியதுடன் அது தொடர் பான புகைப்படங்களையும் மன்றுக்குச் சமர்ப் பித்தனர்.

இதனை தொடர்ந்து முறைப்பாட்டாள ரான சுகிர்தனிடம் இந்த வழக்கை தொடர் ந்து நடத்திச் செல்ல ஆதாரங்கள் உள்ளதா என நீதிபதி வினாவிய போது, அவ்வாறான மேலதிக ஆதாரங்கள் இல்லை என அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி குருபரன் தமது தரப்பு வாதங்களை முன்வைத்திருந்தார். குறிப்பாக தனது வாதத்தில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ண ஜீவன்கூல் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாகச் செயற்படுவதாகவும் நீதிமன்றம், பொலிஸார், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய மூவருக்கும் இடை யில் தொடர்பு இருப்பது போன்றும் பத்திரி கைகளுக்கு கட்டுரை எழுதியுள்ளதாகவும் மன்றுக்குச் சுட்டிக்காட்டினார்;.
மேலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களை குற்றவாளிகள் போன்று சித்தரிப்பதை தவிர, வழக்கினைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவான வேறு என்ன காரணங்கள் இருக்கின்றது எனவும் மன்றில் கேள்வி எழுப்பியதுடன் இவ் வழக்கை தொட ர்ந்து நடத்தாது முடிவுறுத்த வேண்டும் என வும் மன்றில் வாதிட்டார்.
நாட்டின் முக்கிய இரண்டு நிறுவனங்களான நீதித்துறையும் தேர்தல்கள் திணைக்கள மும் தொடர்பாக மக்கள் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், அது பாதிக்க அனுமதிக்க கூடாது எனவும் குறித்த கட்சி சார்பாகவும் இன்னொரு கட்சிக்கு எதிராகவும் றட்ண ஜீவன் கூல் தேர்தல் ஆணைக்குழுவிற்குள் இருந்து கொண்டு செயற்படுவது மக்களுடைய நம்பிக்கையை மீறுகின்றது எனவும் இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு விசாரிக்க வேண்டும் என வும் கேட்டுக்கொண்டதுடன்,

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குள் இருந்து கொண்டு குறித்த நபர் தமிழரசுக் கட்சி சார்பாக செயற்படுவது குறித்து நீதிமன்றில் வழக்கு உள்ள போது, வழக்கினை திசை திருப்பும் வகையில் கருத்து வெளியிட்டமை ஆகியன தொடர்பாக தேர்தல்கள் ஆணைக் குழு விசாரணை நடத்த வேண்டும் என தமி ழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் ஏற்கெனவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவுக்கு கடிதம் அனுப்பியதை சுட்டிக்காட்டி அது தொடர்பாக மன்றும் கட்டளையொன்றை பிறப்பிக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி குருபரன் மன்றைக் கேட்டுக்கொண்டார்.
இவற்றைத் தொடர்ந்து குறித்த வழக்கில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்ததுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ண ஜீவன் கூலின் செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக் குழுவானது முறையான விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் பணிப்புரை பிறப்பித்த தோடு, வழக்கேட்டின் பிரதியையும் தனது கட்டளை யின் பிரதியையும் தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கு அனுப்பிவைக்குமாறும் மன்றின் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.