தெய்வத்திரு. நல்லதம்பி மனோன்மணி அம்மை

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்:- 08-07-1935 - மறைவு:- 14-03-2016
மாதரசி மனோன்மணி பொன்கொழிக்கும் பூமி எங்கள் - தெற்கு
புன்னாலைக்கட்டுவன் புகழுரின் திருமகளாம்
மண்மகள்போல் பொறுமை காத்து
கண்மலர்போல் உறவுகளை அரவணைத்து
புன்முறுவல் புதுமலர்ச்சி முகம் காட்டி
எண்ணளவில் அகவை எண்பது மேல் கண்டு
சொன்ன தமிழ் வள்ளுவ இல் நெறியில்
மண் பெருமை காத்து மனையறம் சிறக்க
தலைவனை வணங்கி வாழ்ந்து வந்த தமிழ் மகளால்
குலம் விளங்க வந்த வாரிசுகளை மடியிலிருத்தி
பாலூட்டி சீராட்டி பாட்டுடனே தமிழூட்டி
வளர்த்தெடுத்துப் பேரர் பூட்டிகளையும்
பெரும் சொத்தாய் பேணி வளர்த்தெடுத்துப்
பூரண வாழ்வு கண்ட மாதரசி மனோன்மணி
அம்மை தெய்வமான நாளின்று!
அனைவரும் ஒன்றிணைந்து அம்மாவின் திருவுருவை
இதயத்தில் பூஜித்து பணிகள் செய்வோம்.
இனிய நல் பணிகள் செய்வோம்!

அஞ்சலி பூக்களுடன் வணங்கி வாழ்த்தும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரர், பூட்டிகள்,
சகோதரன், உறவினர்கள்.