- தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?
- முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்
- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது: விராட் கோலி
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், “ ஒரு தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறுவது என்பது மிகவும் முக்கியமானது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்தை, ஒருநாள் போட்டியிலும் தொடர விரும்பினோம். தென் ஆப்பிரிக்க அணியை 270 ரன்களுக்குள் மடக்கி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அஜின்கியா ரகானே உயர்தர வீரர் ஆவார். தென் ஆப்பிரிக்க தொடரில் வேகப்பந்து முக்கிய பங்காற்றும் என்பதை நாங்கள் அறிந்து இருந்தோம். ரகானே, வேகப்பந்தை அருமையாக எதிர்கொண்டார்” என்றார்.
தோல்விக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளசிஸ் கூறுகையில், “ எங்கள் அணியின் பேட்டிங் எனக்கு அதிருப்தியை தந்தது. நாங்கள் போதுமான ரன்கள் அடிக்கவில்லை. போதிய அளவு பேட்டிங்கும் செய்யவில்லை. 50 முதல் 70 ரன்கள் வரை குறைவாக அடித்துவிட்டதாக நான் எண்ணினேன். கிறிஸ் பேட்டிங்கில் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அனால், ஒட்டுமொத்தமாக பேட்டிங்கில் எங்களின் செயல்பாடு அதிருப்தி அளித்தது. விராட் மற்றும் ரகானே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்” என்றார்.