தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு

தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம் அமைக்க தேவையான நிலத்தை தமிழக அரசு 6 மாதங்களில் ஒப்படைக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.

இது குறித்து லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கூறியதாவது,‛ விண்வெளித்துறையின் வேண்டுகோளை ஏற்று ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் 961 ஹெக்டேர் நிலத்தை அடையாளம் கண்டறிந்துள்ளது.

இன்னும் 6 மாத காலத்தில் அந்த நிலத்தை தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்படடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 961 ஹெ க்டர் நிலத்தில் 431 ஹெ க்டர் நிலத்தில் அளவிடும் பணி நிறைவடைந்துள்ளது. மீதி நிலத்திற்கு அளவிடும் பணி தற்போது நடந்து வருகிறது’ இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே தூத்துக்குடி மாவட்ட கிராமங்களான மாதவன்குறிச்சி, படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.