தீவிர சிகிச்சைக்கு பலனளிக்காமல் அன்பழகனின் உடல் நிலை !!

மருத்துவமனையில், கவலைக்கிடமான நிலையில் இருக்கும், அன்பழகனின் உடல் நலம் குறித்து, டாக்டர்களிடம், கேட்டறிந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ‘தீவிர சிகிச்சைக்கு பலனளிக்காமல் அன்பழகனின் உடல் நிலை உள்ளது’ எனத் தெரிவித்தார்.

தி.மு.க., பொதுச்செயலர், அன்பழகன், 97, உடல் நலக்குறைவு காரணமாக, சில நாட்களாக, சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்; அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அன்பழகனுக்கு, சிறப்பு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு சென்று, அன்பழகனின் உடல்நிலை குறித்து, அவரது உறவினர்களிடமும், டாக்டர்களிடம் விசாரித்தார். பின், ஸ்டாலின் அளித்த பேட்டி: அன்பழகன் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வால் டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை பயனளிக்க முடியாத நிலையில் உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.