தீபாவுடன் இணைந்து செயல்பட தயார்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

ஜெயலலிதாவின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட தீபாவுடன் இணைந்து செயல்பட தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தி யாளர்களிடம் நேற்று கூறிய தாவது:

தேர்தல் ஆணையத்திடம் எங்கள் தரப்பு நியாயமான வாதங்களை முன்வைத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக தேர்தல் ஆணையம் மேலும் விவரங்கள் கேட்டு நேரில் அழைத்துள்ளது. நாங்கள் டெல்லி சென்று கழக சட்டவிதிமுறைகள் குறித்து எடுத் துரைப்போம்.

எம்ஜிஆருக்கு பின்னால் அதிமுகவை மாபெரும் இயக்கமாக ஜெயலலிதா நடத்தி வந்தார். சிறந்த நிர்வாகத்தை அளித்தார். ஜெயலலிதாவின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட தீபாவுடன் இணைந்து செயல்பட தயார்.

சட்டியில் இருந்தால்தான் அகப் பையில் வரும். வெறும் கரண்டி யில் என்ன செய்ய முடியும்? எடப் பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் நிதி நிலை அறிக்கை வெறும் கரண்டியைபோல இருக் கிறது. ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருந்தபோது, அவருடைய வழியில் திறமையான ஆட்சியை நடத்தி வந்தேன். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பாக மக்கள் நல்ல தீர்ப்பு தருவார்கள்.

தனிக்கட்சி எண்ணம் இல்லை

எனக்கு தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு இல்லை. அது எங்களுக்குத்தான் கிடைக்கும். எங்களுடன் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

கட்சியின் பொதுச் செயலாளரை எம்எல்ஏக்களோ, பொதுக்குழு உறுப்பினர்களோ தேர்ந்தெடுக்க முடியாது. கட்சி உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க முடியும். கழக சட்ட விதிப்படி தேர்வு செய்யப்படாத பொதுச் செயலாளர் பதவியில் தொடர்வது செல்லாது என்று நாங்கள் வாதிட்டுக்கொண்டு இருக்கிறோம். மேலும் அவரால் ஏற்கெனவே உள்ள நிர்வாகிகளை நீக்கவோ, புதிய நிர்வாகிகளை நியமிக்கவோ முடியாது.

இந்நிலையில், ஜெயலலிதா வால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தின கரன் மீண்டும் சேர்க்கப்பட்டு துணைப் பொதுச் செயலாளராக அறிவித்து ஆர்.கே.நகரில் போட்டி யிடுவது கழக சட்டத்துக்கு எதிரா னது. இவ்வாறு அவர் கூறினார்.

எம்பி பார்த்திபன், முன்னாள் எம்பி சையது கான் ஆகியோர் உடனிருந்தனர்.