தி.மு.க. பிரபலங்கள்: தடைகளை தாண்டியது ராஜா புத்தகம்

தி.மு.க., தலைமையுடனான கடும் போராட்டத்துக்கு பின், சில முக்கிய தகவல்கள் நீக்கப்பட்டுள்ள, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்த, ராஜாவின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு, கட்சியின் பிரபலங்கள் டில்லிக்கு வருவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கிலிருந்து விடுதலையான பின், தி.மு.க., தலைவர் கருணா நிதிக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தனித் தனியாக கடிதங்கள் எழுதினார்.

மன்மோகன்சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், அவர் கூறியிருந்ததாவது: குற்றமற்றவன் என பலமுறை கூறியும், என்னை நீங்கள் காப்பாற்றவில்லை. சில நிர்ப்பந்தங்களுக்காக, நீங்கள் ஆதரவுக் கரம் நீட்டவில்லை. இன்று நான் நிரபராதி. உங்கள் அமைச்சக சகாக்கள் சிலரைப் போல அல்ல நான். எப்போதும் தங்கள் விசுவாசிதான்.

இத்தனை ஆண்டுகால வழக்கு விசாரணையில், தங்களுக்கு சிறிதுகூட தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லை

நான். தற்போது உண்மை வெளிவந்துள்ள நிலையில், இனியாவது எனக்கு ஆதரவு அளிக்க முன்வருவீர்கள் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் அதில் எழுதியிருந்தார்.இக்கடித விவகாரம், முதலில் வெளியில் தெரியாமல் இருந்தது. ஆனால், மன்மோகன் சிங்கிடமிருந்து, புத்தாண்டு வாழ்த்துகளுடன் கூடிய பதில் கடிதம் வந்ததும், கடித விவகாரம்வெளியில் கசிந்து விட்டது.
இந்நிலையில்தான், ஸ்பெக்ட்ரம் வழக்கில், சி.பி.ஐ., மேல் முறையீடு செய்யலாம் என்பதால், இந்த விவகாரம் தொடர்பான கூடுதல் விபரங்களுடன் புத்தகம் எழுதி, அதை வெளியிட, ராஜா தயாரானார்.