தி.மு.க தொடர் அமளி சட்டசபை 2 வது முறையாக 3 மணி வரை ஒத்தி வைப்பு

தி.முக உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்து சபாநாயகர் மீண்டும் சட்டபேரவையை 3 மணி வரை ஒத்திவைத்தார்.

கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது. தொடங்கியது சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. சட்டசபை கூடியதும் சபாநாயகர், சபை கூடியதற்கான காரணங்களை தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ் அணியின் கொறடா செம்மலை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

திமுக, ஓ. பன்னீர்ச் செல்வம் அதிமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் எடப்பாடி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது.சட்டசபையில் ஓபிஎஸ் அணியினர், எதிர்க்கட்சிகள் ரகசிய ஒட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர்.ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்திற்கு வழி வகுக்கும் சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு சென்று வந்த பிறகே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.தொகுதி மக்களை சந்திக்க எம்.எல்.ஏக்களை அனுமதிக்கவேண்டும் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ நட்ராஜ் கோரினார்.இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது – திமுக உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கை  வைத்தது.

15 நாட்கள் அவகாசம் இருக்கும் நிலையில் ஒரே நாள் இடைவேளையில் வாக்கெடுப்பு நடத்த அவசியம் என்ன? என திமுக சட்டமன்ற துணை தலைவர் துரைமுருகன் கூறினார்.

என்னுடைய முடிவை பேரவை உறுப்பினர்கள் ஆட்சேபிக்க முடியாது.வாக்கெடுப்பு முறை என்பது எனது தனிப்பட்ட முடிவு யாரும் தலையிட முடியாது என சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் திமுக, ஓபிஎஸ் அதிமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதற்கு எதிராக சசி தரப்பு எம்.எல்.ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. உறுப்பினர்களைத் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனாலும் அமளி நீடித்தது. இந்த அமளிக்கு இடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

சபை தொடங்கி ஒரு மணி நேரமாகியும்  இன்னும் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் தொடங்கவில்லை. எதிர்கட்சியினர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.திமுக எம்எல்ஏக்கள் இருக்கை மீது ஏறி கோஷம் – சபாநாயகரின் இருக்கைக்கு முன் இருந்த நாற்காலிகள் உடைப்பக்கபட்டது.உறுப்பினர் பூங்கோதை மேஜை மீது ஏறி  நின்று வாக்குவாதம் செய்தார். உறுப்பினர்கள்  பேப்பரை கிழித்தும் தூக்கி எறிந்தும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.

சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க உறுப்பினர் கு.க செல்வம்,புரசைவக்கம் எம்.எல்.ஏ ரங்கநாதன் ஆகியோர் அமர்ந்தனர்  போராட்டம் நடத்தினார். தி.மு.க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்திற்கும் அமளிக்கும் அ.தி.மு.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி  தி.மு.க எம்.எல்.ஏக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.எம்.எல்.ஏக்கள் ரகளையில் சட்டசபை ஊழியர் பாலாஜி மயக்கம் அடைந்தார். உடனடியாக அவர ஆம்புலன்சில் மருத்துவமனை கொண்டு செல்லபட்டார்.

மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தினார். சட்டசபையை வளாகத்தில் அதிரடிப்படை குவிக்கபட்டு உள்ளனர்.

பின்னர் மதியம் ஒரு மணிக்கு கூடியது. சபை கூடியதும் சபாநாயகர் கூறும் போது தனக்கு நடந்த கொடுமையை எங்குபோய் கூறுவது  என தனது வேதனையை வெளிப்படுத்தினார்.ச்பை விதிகளின் படியே நான் சபையை நடத்துகிறேன்.என கூறினார்.

தொடர்ந்து தி.மு.க உறுப்பினர்கள் சமளியில் ஈடுபட்டதால் தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்ற சபைகாவலர்களுக்கு உத்தரவிடார். இதை தொடர்ந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற சபைகாவலர்கள் கேட்டு கொண்டனர்.அவையில் இருந்து வெளியேற மறுத்து திமு.க உறுப்பினர்கள் சபை காவலர்களுடன்  தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து தி.மு.க உறுப்பினர்கள்  மீண்டும் சபாநாயாகரை முற்றுகையிட்டனர்.மீண்டும் சபாநாயகர் தனபால் மைக் உடைக்கபட்டது. அதிமுக அமைச்சர்களின் இருக்கையில் ஏறி தி.முக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.மீண்டும் அமளியை தொடர்ந்து சபாநாயகர் மீண்டும்  சட்டபேரவையை 3 மணி வரை ஒத்திவைத்தார்.

ஆனால் சட்டபையை விட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஓ.பன்னீர் செல்வம் ஆதர்வாளர்களும் வெளியேறவில்லை. எடப்பாடி பழனிசாமி அணியினர் மட்டும் வெளியேறினர்.