- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

திரையரங்குகள் வேலைநிறுத்தம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் விஷால் பேட்டி
சென்னையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில், சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் நாளை திரையரங்குகள் மூடப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஜிஎஸ்டி, சினிமாத்துறை பிரச்சனைகள் குறித்து, அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் செய்தியார்களிடம் கூறியதாவது:
டிடிஹெச்சில் திரைப்படத்தை வெளியிடுவது பற்றி எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைகள் மீது நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை ஒத்திவைக்க கோரிக்கை வைத்தோம். திரையரங்கு உரிமையாளர்களின் வேலை நிறுத்தப்போராட்ட அறிவிப்பு வருத்தமளிக்கிறது. தயாரிப்பாளர்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் சங்கம் முன் எடுக்கும். திரையரங்குகள் வேலைநிறுத்தம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.