- கிரண் மோரேவுக்கு கொரோனா: மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சோதனை
- இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு - 3 பேர் உயிரிழப்பு
- பொது செய்தி தமிழ்நாடு 'நீட்' பயிற்சியை மீண்டும் 25 ல் துவங்க உத்தரவு
- ஸ்ரீ ராம நவமி - ஏப்ரல் 21
- பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன
Posted on by netultim2

மரண அறிவித்தல்
திரு நாகராஜா கனகசபை
யாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா கனகசபை அவர்கள் 14-10-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், நாகர்கோவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னாச்சி(கதிரிப்பாய்) தம்பதிகளின் அன்பு மகனும், கதிரிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற கார்த்திகேசு, சிதம்பரம்மாள் (சின்னன் அக்காள்) தம்பதிகளின் அன்பு மருமகனும், மலர்(கனடா) அவர்களின் அன்புக் கணவரும், கேந்திரவதனி(பேபி-ஜேர்மனி) வசேனாபதி(தேவன்-கனடா ) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான சிவகுரு(பருத்தித்துறை) பரிமளம்(மலேசியா) வள்ளியம்மாள்(கதிரிப்பாய்) ஆகியோரின்சகோதரரும், ஜோன் அன்ரனி ஜெயக்குமார் சகிலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், நவரட்ணம்(முன்னாள் இராணுவ அதிகாரி- கொழும்பு) இராசமணி(திருகோணமலை) குமாரசாமி(கனடா)
புவனேஷ்வரி(லண்டன்) தங்கவடிவேல் காலஞ்சென்ற யோகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும், மீனாட்சி(கதிரிப்பாய்)இவள்ளிப்பிள்ளை பார்வதி ஆகியோரின் அன்பு பெறாமகனும், தம்பையா (ஆசிரியர்-மயிலிட்டி) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும், பரமலிங்கம்(அப்பு- கனடா) அவர்களின் அன்பு மாமனும், சின்னதுரை வேலுபிள்ளை ஆகியோரின் அன்பு மருகனும், ஸ்ரீதேவி ராணி காலஞ்சென்ற வில்வரத்தினம் சந்திரமூர்த்தி காலம்சென்ற விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகலனும், பருதி குலசேகரம்( வண்ணம்- கனடா) கணேஷ்(கனடா) சித்திர(கனடா) உமா(கனடா) ஆகியோரின் சிறிய தந்தையும், சந்திராதேவி(ஐக்கிய அமெரிக்கா) சத்திபாமா(கனடா) இந்திராதேவி(வற்றாப்பளை) நந்தகோபால்(கனடா ) சுசில(அம்மன்- கதிரிப்பாய்) புஸ்பராணி(கொழும்பு) திருஞான சேகரன(சிவம்- ஜெர்மனி) தங்கராச(மட்டக்களப்பு)
நாராயணநாதன்(பருத்தித்துறை) கிருஷ்ணநாதன்(பருத்தித்துறை) ராமநாதன்(கதிரிப்பாய்), காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(திருகோணமலை) பிறைசூடி(கதிரிப்பாய்), செல்லையா(கதிரிப்பாய்), அருணகிரிநாதர(கதிரிப்பாய்), தங்கரத்தினம் (காங்கேசன்துறை) கிருஸ்ணவேணி(பருத்தித்துறை), ஆகியோரின் அன்பு மைத்துனரும், நகுலன்(ஜெர்மனி) ஹரி மிரேஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
தகவல்
குடும்பத்தினர்