திரு.செல்வபெர்னான்டோ ராஜசேகரம்

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும்

தோற்றம்: 06 வைகாசி 1954 - மறைவு: 07 வைகாசி 2017

எப்பொழுதும் எம்முடனே வாழ்வீரென நினைத்தோம்
இடைவழியில் இறைவனிடம் செல்ல ஏன் நினைத்தீர்
முப்பத்தியொரு நாட்களின் முன் பிரியாமல் பிரிந்தீர்
சிந்தை கலங்கித் தவிக்கிறோம் வருவீரோ மீண்டும்!


எங்கிருந்து வந்ததோ அந்தக் கொடிய நோய்
எப்படித் தாங்குவோம் எம் சிந்தை கலங்கினோம்
எப்போது மீண்டும் நாம் தங்களைக் காணுவோம்
இறையாசி வேண்டுகிறோம் அமைதியில் உறங்குவீர்!


அமரர் ராஜசேகரம் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது வருகைதந்தோர், அழைத்து ஆறுதல் கூறியோர், இவரது இழப்பின்போது பல்வேறு வகையிலும் கவலையைப் பகிர்ந்து கொண்டோர், மலர்வளையம் மற்றும் தகவல் அனுப்பியோர், இறுதிக் கிரிகைகளில் பங்கேற்றோர், பிரார்த்தனைகளை வழங்கியோர் மற்றும் அன்பைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

--கலங்கித் தவிக்கும் மனைவி, மகன் உற்றார், உறவினர்தொடர்புகளுக்கு

(647) 874-2033