திரு சின்னத்தம்பி மகாதேவன்

மரண அறிவித்தல்

மலர்வு : 12 டிசெம்பர் 1934 - உதிர்வு : 5 யூன் 2017

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணியை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மகாதேவன் அவர்கள் 05-06-2017 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.


அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும், அகிலா, அகிலன், அனுசியா, அகிலதா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் அன்புச் சகோதரரும், விமலநாதன்(கண்ணன்), கலைச்செல்வி, சேரமான், சிவகாந்தன்(காந்தன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, திலகவதி, பூமணி, குணரட்னம், அன்னலட்சுமி, மற்றும் குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், அகிம்சன், ஜோன், ஏனோக், டானியேல், ஜோசுவா, ரெபேக்கா, ஜோசுவா, சாலோம், ஷாத்ராக், கனானி, சாம், சாதோக், சலோமி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7 இல் அமைந்துள்ள Aeterna Funeral Home இல் வெள்ளிக்கிழமை 09/06/2017, 03:00 பி.ப — 09:00 பி.ப வரையும் சனிக்கிழமை 10/06/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் நல்லடக்க ஆராதனைக்காக 1375 Rue Poirier, United Pentecostal Church ற்கு எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 01:00 மணியளவில் 1523 Rue Antoine-Dalmas, Laval, QC H7Y 2A8 என்னும் முகவரியில் உள்ள நினைவுப்பூங்காவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
-தகவல் குடும்பத்தினர்தொடர்புகளுக்கு

சரோஜினிதேவி(மனைவி) — கனடா 1514 369 4667
அகிலன் — கனடா 1 514 962 1297
காந்தன் — கனடா 1 514 449 8515