- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு
Posted on by netultim2

திரு. சதாசிவம் செல்வராசா
நன்றி நவிலல்
ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் - இலங்கை கனடா ஐயப்பன் ஆலயத் தொண்டர்
எங்கள் குலவிளக்கு திரு சதாசிவம் செல்வராசா அவர்கள் ஐயப்பன் திருவடி சேர்ந்த வேளையில் எங்கள் இல்லத்திற்கு நேரில் வந்து அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும், தொலைபேசி ழூலம் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், கனடா ஐயப்பன் ஆலயத் தொண்டர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்ந்து 31ம் நாள் எங்கள் இல்லத்தில் நிகழ்ந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் கலந்து ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும், எங்களுக்குப் பலவழிகளிலும் உதவிய உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைத்து உள்ளங்களுக்கும், எங்கள் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் விஷேடமாக, ஐயப்பன் ஆலயத்தில் விஷேட பூசைகள் செய்து, விஷேட இரங்கல் உரை ஆற்றிய மதிப்பிற்குரிய ஆலய குருக்கள் ஐயா அவர்களுக்கும் எங்கள் விஷேட நன்றிகள் பல நல்குகின்றோம்.
ஐயப்பன் ஆலய அனைத்துத் தொண்டர்களும் இணைந்து அன்னதான மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் எங்கள் குடும்பத்தின் குலவிளக்கின் நிழற்படம் வைத்து மலர்கள் சொரிந்து, கண்ணீர் அஞ்சலி செய்து, இரங்கள் உரைகள் பல ஆற்றி, அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனைகள் செய்தார்கள். தொடர்ந்து மண்டபம் நிறைந்த மக்கள் அனைவருக்கும் இருகரங்களாலும் நிறைவான உணவு அளித்து நிகழ்வை இனிதே நிறைவேற்றினார்கள்.
கனடா ஐயப்பன் ஆலயத் தொண்டர் குழுவினர் அமரரின் கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்களை, விஷேடமாக கனடா "உதயன்" பத்திரிகையிலும் வெளியிட்டு ஐயப்பன் அடியார்களையும் எங்களையும் அன்புடன் அழைத்து மேற்குறிப்பிட்டபடி அஞ்சலி நிகழ்வையும், அன்னதான நிகழ்வையும் மிகவும் சிறப்பாக நடத்தினார்கள்.
நன்றி! நன்றி!! நன்றி!!!
அன்பு மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மற்றும் சகோதரர்கள்