- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் 40வது திருமண நாள்
யாழ்ப்பாணம்-வரணி ஆகிய இடங்களைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும் தற்போது கனடாவில் பல வருடங்களாக வாழ்ந்து வருபவர்களுமான திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் 40வது திருமண நாள் கொண்டாட்டம் இன்று ஸ்காபுறோ நகரில கென்னடி வீதியில் உள்ள “கென்னடி கொன்வென்சன் சென்றர்” மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அழைக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள என பலர் குடும்பம் சார்ந்தவர்களோடு வந்து கலந்து கொண்டார்கள். மிகவும் நெகிழ்ச்சியான ஒரு கொண்டாட்டமாக திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் 40வது திருமண நாள் விழா நடைபெற்றது என்றால் மிகையாகாது.
தம்பதிகள் இருவருமே ஒத்து குணாம்சங்கள் நிறையவே கொண்டவர்கள். அவர்களது பிள்ளைகள் இருவரும் மிகவும் அன்பாகவும் நெருக்கமாகவும் தங்கள் பெற்றோருடன் பழகி வருகின்றனர்.
அதற்கு மேலாக திருமதி ராஜேஸ் அக்காவின் சகோதர சகோதரிகளின் நெருக்கமும் அவர்களது ஒத்துழைக்கும் மற்றும் அன்பு காட்டும் தன்மை தன்னைக கவர்ந்ததாக அங்கு உரையாற்றிய திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் மற்றும் அவர்களது குடும்பத்தின் நண்பரும் உறவினருமாகிய திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் தெரிவித்தார்.