திரு அருளலிங்கம் நாராணபிள்ளை

மரண அறிவித்தல்

தோற்றம் : 13 ஏப்ரல் 1937 இறப்பு : 16 நவம்பர் 2016

(ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்)
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அருளலிங்கம் நாராணபிள்ளை அவர்கள் 16-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான நாராணபிள்ளை பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரெத்தினம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், லோகநாயகி(முன்னாள் ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், மலர்விழி(கனடா), அருள்வண்ணன்(பிரித்தானியா), அருள்விழி(சுவிஸ்), அருட்குமரன்(பிரித்தானியா), சுடர்விழி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான திருமேனிப்பிள்ளை, முத்துலிங்கம், மற்றும் புனிதவதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற இரத்தினசபாபதி, வரதலட்சுமி, காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, விமலநாயகி, மற்றும் செல்வநாயகி, இந்திராதேவி, அருட்கண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், இராமகிருஸ்ணன்(கனடா), பிரியா(பிரித்தானியா), தயானந்தன்(சுவிஸ்), மதுமதி(பிரித்தானியா), இராமேஸ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சிவானந்தன், பேரின்பநாதன், இரத்தினசிங்கம், காலஞ்சென்ற மனோரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகலனும், நயனி, நாரணன், ஆரணன், சாருஜன், அனுராகன், பிரியன், மிதுரா, நிரன், அஞ்சலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 4164 Sheppard Ave E> Scarborough> ON M1S 1T3 இல் அமைந்துள்ள ழுபனநn குரநெசயட ர்ழஅநள ஞாயிற்றுக்கிழமை 20/11/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப பார்வைக்கு வைக்கப்பட்டு திங்கட்கிழமை 21/11/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப வரை கிரியை நடைபெற்று பின்னர்M 256 Kingston Rd> Toronto> ON M4L 1S7 இல் அமைந்துள்ள St. John's Norway Cemetery & Crematorium இல் 11:45 மு.ப — 12:15 பி.ப தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

இராமகிருஸ்ணன்(ராதா)
கனடா 416 495 7567 416 908 5161
அருட்குமரன்(நேரு)
பிரித்தானியா 011 44 7919994669
அருள்விழி தயானந்தன்
சுவிட்சர்லாந்து 011 41 719124891