திருமதி வசந்தா நடராஜன் – ஈழத்து திருக்கோயில்கள்

திருமதி வசந்தா நடராஜன்! இந்த வசந்தமான பெயருக்குரிய அம்மையார் தற்போது கோடையும் வசந்தமும் குளிர்காலும் ஆண்டு தோறும் அணிவகுத்து வரும் கனடா தேசத்தில் வாழ்ந்து வருகின்றார்.

ஒரு காலத்தில் வசந்தா நடராஜன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறம் இரதோற்சவத்தை இலங்கை வானொலியூடா இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ள சமய ஆர்வலர்களின் செவிகளுக்கு எடுத்துச் செல்லும் “நேர்முக வர்ணனையை ” தரத்தோடும் குரல் வளத்தோடும் ஆண்டுகள் பல வழங்கியவர்.

தற்போது கனடாவில் கால் பதித்து “சும்மா” வாழ்ந்து விட்டுப் போவோம்! என்று இருக்கவில்லை வசந்தா நடராஜன் அம்மையார்.

இங்கு இந்து சமய நிகழ்சசிகளில் பங்கெடுத்து சமய உரைகளை ஆற்றி வருகின்றார்.

அத்துடன் எமது கனடா உதயன் பத்திரிகையில் வாராந்தம் “,ஈழத்து திருக்கோயில்கள்” என்ற தலைப்பில் ஈழத்தில் உள்ள ஆலயங்கள் பற்றிய தொடர் கட்டுரையை எழுதி வருகின்றார்.

இது வரை இவர் எழுதிய தொடர்கள் 771 வாரங்கள். அவற்றில் நிச்சயம் சுமார் 400 ஆலயங்களையாவது பற்றி வசந்தா நடராஜன் அம்மையார் எழுதியிருப்பார்.

771 வாரங்கள் என்றால் ஒரு சில வருடங்கள் அலல என்பதை எமது வாசகர்கள் அறிவார்கள். அவர் தொடர்கள் எழுதிவருவது சுமார் 14 வருடங்கள் என்பதை அறிகின்றபோது எமக்கு வியப்பாக உள்ளது. எவ்வாறு முடிந்தது இந்த அம்மையாரால் என்ற வினா எழுந்து நிற்கின்றது.

இந்த வாரம்- 22-12-2017 வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள எமது கனடா உதயன் பத்திரிகையில் யாழ்பபாணம் திருநெல்வேலி ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆ லயம் பற்றி எழுதிய கட்டுரை பிரசுரமாகியுள்ளது.

அடுத்த வாரமும் இந்தக் கட்டுரை தொடரும்.

கனடா உதயன் பத்திரிகையில் உங்கள் ஊரின் ஆலயங்கள் பற்றிய கட்டுரைகளை திருமதி வசந்தா நடராஜன் அவர்கள் எழுத வேண்டும் என்ற அவா எவருடைய மனங்களில் எழுமானால் அவரைத் தொடர்பு கொள்ள 00 1 416 332 0269 என்னும் தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளவும். அல்லது vasantha@rogers.com என்னும் மின்னஞ்சல் விலாசத்திலும் திருமதி வசந்தா நடராஜன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

கனடா உதயன் பத்திரிகையை வாரந்தம் என்னும் இணையத்தளத்தில் உள்ள இபேப்பரில் பார்க்க முடியும் . கனடா உதயன் மின்னஞ்சல் விலாசம் uthayannews@yahoo.com