திருமதி பூபதி கந்தையா

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

தோற்றம்:-17-05-1946 - மறைவு:- 25-03-2017
யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் கனடா மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பூபதி கந்தையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி


எங்கள் குடும்பத்தின் குலவிளக்கு பூபதி கந்தையா இறைவனடி சேர்ந்த வேளையில் எங்கள் இல்லத்திற்கு நேரில் வந்து அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களிற்கும், தொலைபேசி மூலம் எமக்கு ஆறுதல் கூறி எமது துக்கத்தில் பங்கு கொண்டு அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், இறுதிக் கிரியைகளில் கலந்து மலர் வளையங்கள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் வெளியிட்டோருக்கும், அத்ம சாந்திப் பிரார்த்தனையில் கலந்து ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை புரிந்த அனைவருக்கும் எங்களோடு பல வழிகளிலும் உதவிய உற்றார், உறவினர், நண்hர்கள் மற்றும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


மேலும் அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இல் 1380 Birchmount Road, Scarborough, ON, M1P 2E3 அமைந்துள்ள கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியத் தருகின்றோம்.


தங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்