திருமதி. பூபதியம்மா செல்வராசா

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்:-10-08-1930 - மறைவு:- 01-05-2016
அச்சுவேலி, பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பூபதியம்மா செல்வராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.


ஆண்டு ஒன்று சென்றதம்மா ஆண்டவன் திருவடியை நீங்கள்டைந்து ஆறாத்துயரத்தை எமக்களித்து மறைந்து விட்டீர்கள்... நாளெல்லாம் நாம் நலமோடு வாழ காலமெல்லாம் நமக்கு கரம்தந்த தாயே! பிள்ளைகளுக்காய் மட்டுமன்றி பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர் அனைவரும் நலமாய் வாழ மெழுகுவர்த்தியாய் உங்களையே உருக்கி எம் வாழ்விற்கு ஒளி தந்த எம் தெய்வத்தாயே! கனவிலும் இழக்க முடியா உறவு நீங்கள் கண்களில் நீர் நிறைந்த போதும் உள்ளத்தில் உங்கள் உருவம் மட்டும் உடையவில்லை... வலி இல்லாத நினைவாய் வாழ மறுக்கிறது எம்முள்ளம் வலி பெற்ற நினைவுகள் மனதை விட்டு மறைவதில்லை கண்ணீரை நாம் அறியாமல் வளர்த்த தாயே - இன்று கண்ணீரில் நனைகின்றோம் துடைப்பதற்கு நீங்கள் அருகில் இல்லை... துயர் போக்க உங்கள் கரம் இன்றித் தவிக்கின்றோம் அம்மா! எஞ்சிய காலமெல்லம் எமக்கு தோன்றாத்துணையாய் விண்ணின்று இறைவனோடு கருணை தந்தெம்மை காத்திடம்மா...


உங்கள் பிரிவால் துயருறும், அன்பு கணவர், பிள்ளைகள், மருமக்கள்.

பேரப்பிள்ளைகள்.

(416) 265-3099