Posted on by netultim2

திருமதி புஷ்பமணி வைத்தியநாதன்(அனலைதீவு)
6ம் ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டுகள் ஆறு கழிந்தாலும் உங்கள் நினைவுகள் எங்களை விட்டகலா
ஈரைந்து மாதங்கள் எடையோடு சுமந்து நிலையறியும் பருவம்வரை
எமக்கென வாழ்ந்த எங்கள் தெய்வம் – எங்கள்
இரு கண்கள் உறங்கிட அவள் விழிகள் விழித்துக் கொள்வாள்
எங்கள் பசியைத் தீர்த்திட உடலின் உதிரத்தைப் பாலாக
அன்பின் வடிவில் எங்களுக்கு ஊட்டிய தெய்வம்
சுவாசித்த இதயங்களில் நேசிக்க வைத்த இதயம் அம்மா
ஒரு முறை உதிக்கும் நம்மைத் தினம் தினம் சுமக்கும்
ஓரே ஜீவன் நம் அன்னை இறைக்கே இணையாகி, வானிற்கு நிகராகி
பேரன்பிற்கு இலக்கணமானவள் எங்கள் அம்மா
இவளருகில் தோள் சாயும்போது துன்பத்தின் சுவடுகளும் தொலைதூரம்
இவள் மடியில் துயிலுறங்கும் போது இதயத்தில் இன்பத்தின்
அருவியும் கரை புரண்டோடும்
என்றென்றும் உங்கள் அன்பு நினைவுகளுடன் உங்கள்
ஆத்ம சாந்திக்காய் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி, ஓம் சாந்தி