- கிரண் மோரேவுக்கு கொரோனா: மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சோதனை
- இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு - 3 பேர் உயிரிழப்பு
- பொது செய்தி தமிழ்நாடு 'நீட்' பயிற்சியை மீண்டும் 25 ல் துவங்க உத்தரவு
- ஸ்ரீ ராம நவமி - ஏப்ரல் 21
- பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன
Posted on by netultim2

திருமதி. நீலவேணி விசுவலிங்கம்
30ம் வருட நினைவஞ்சலி
என்னவளே இணைபிரிந்து ஏக்கமுற எனைவிட்டு
முன் உயர்வாய் போன கதை மூபத்து ஆண்டுகளாம்
மன்னுதுயர் மனதுறைய மனையவளே மறை வெண்ணி
இன்பறவே என்வாழ்வு இருந்தகன்று போனதம்மா…
பொல்லா நோய் புகுந்துன்னை பொழுதெல்லாம் வாட்டியதே
எல்லாம் அவன் ஆடல் ஆட்கொள்ள என்றுணர்ந்து
கல்லாகிப் போனமனம் கனிந்தாற்க கண்டதம்மா…
மற்றவர் துன்பம் தாங்கா மனதுறு கருணை பேணி
பற்துயர் வாழ்வில் என்னைப் பதியென பணிகள் செய்து
வெற்றுடல் விட்டு நீயோ விண்ணிடை போந்ததேனோ
பொய்யாய் மொழிபுகழாய் போயகலப் புறங்கூறாய்
வெய்ய வினையறியாய் வெருவியோர் பகையறியாய்
துய்யதோர் உள்ளத்து தூமணியே நீயம்மா…
பேச்சுவல்லாய் வாயினும் மனுத்தும் ஒன்றாய் வஞ்சனையற்ற நெஞ்சாய்
காயினும் உள்ளம் காட்டா கனிமுகத்து அன்பு கொண்ட
சேயினாய் போயுமென்ன சேர்ந்துளத்துறைவாம் என்றும்
விஞ்சுயர் வாழ்வு சேர விடியலாய் ஒளிர்ந்தபோதும்
நெஞ்சுயர் நினைவு யாவும் நீர்ப்பனியாகக் காய
வஞ்சகம் செய்து என்னை வையகம் விட்டேன் போனாய்
உற்ற உன்பாசம் காணா உணர்வினால் உள்ளம் காய்ந்து
அற்ற நீர் பறவையாக அனுதினம் அகத்தால் வாடி
பெற்றவர் உன்னைத் தேடும் பெருவலி தீர்ப்பாயம்மா…..
பூத்திருந்து என்மனதில் பொலிவு சுகம் தந்தவளே
நீத்து உயிர் விட்டகன்று நெடுந்தூரம் போனாலும்
கூத்தவனை வேண்டி உனை கூட்டிவைக்க வேண்டுகின்றேன்…..
நிரைபோன துறவகன்ற கன்றெனவே உனைத் தேட
அரை உலையிற் கரும்பெனவே அனுதினமும் அகம் நோக
உரை விரையாய் உயிர் போனாய் உணர்வகன்று ஏங்குதம்மா…..
பெருவரச் செல்வப் பேறாய் பிள்ளைகள் பெற்றுத் தந்து
வருபலன் கூடு முன்னே வையத்துப் பாதி வாழ்வில்
உருகிட வைத்து என்னை உயிரினை விட்டதேனோ…..
எண்மனத் தெண்ணம் உன்னை இணையுறு வாழ்வுக் கேங்கும்
உண்ணிடும் உணவு தோறும் ஒளிமுகத் தோம்பல் தோன்றும்
மண்ணில் என் மாயை வாழ்வு மாவிதிப் பலனோ என்ன….
ஏற்றுவேன் இணையே என்றும் என் உயிர் இதயம் சேர
ஆற்றுவேன் அவலம் ஓர் நாள் அணித்துனைச் சேர்வேன் என்று
பேற்றும் செல்வமானாய் பெரிது உயர் காலம்வாழி…