திருமதி. நிருஜா சுதாகரன்

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

மலர்வு 24-10-1979     –    உதிர்வு 01-07-2017
 

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டு அமரத்துவமடைந்திட்ட திருமதி. நிருஜா சுதாகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

ஏற்றமிகு இல்லற வாழ்வில் இணையிலாத் துணைவியாய்
என் இதய வானில் வலம்வந்த நிரூஜாவே
என்னே விதியம்மா ஏனிந்தக் கொடுமையம்மா
உந்தனை இழந்து நாம் தவிக்கும் தவிப்பு
முழுநிலவாய் காட்சி தந்த அழகுத்திருமுகம்
நீறாகிப் போய் மாதமொன்று ஓடி மறைந்தும்
விழிகளில் கண்ணீர் நித்தம் சொரியுதே
விருப்புடன் கரம்பற்றிய கணவர் பிள்ளைகள்
உற்ற தந்தை உயிரான உடன்பிறப்புக்கள்
கண்ணீர் சிந்தி நின்று கலங்கித் தவிக்க
அல்லலின்றி அடைந்துவிட்டீர் இறைவனடியே
இன்பமாய் சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்

ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்டுவிட்ட எங்கள் குடும்பத் தலைவியின் மறைவுச் செய்திகேட்டு எங்கள் இல்லங்களிற்கும் பார்வைக்கு வைக்கப்பட்ட மண்டபத்திற்கும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியோர், தொலைபேசி மூலம் உலகின் பல பாகங்களிலிருந்து தொடர்பு கொண்டு அனுதாபம் தெரிவித்தவர்கள், இரங்கலுரை நிகழ்த்தியோர், தேவார திருமுறைகளைப் பாடியோர், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் வெளியிட்டும், மலர் வளையங்கள் வைத்தும் அஞ்சலி செலுத்தியோருக்கும், சகல வழிகளிலும் உடனிருந்து ஒத்தாசைகள் புரிந்தோருக்கும் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நிருஜாவின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும், மதியபோசன வைபவமும் எதிர்வரும் ஆறாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் (06-08-2017) 6591 Innovator Drive, Mississauga வில் அமைந்துள்ள Apollo Convention Centre ல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்:

திரு. சுதாகரன் சண்முகநாதன் (கணவர்): (416) 844-6084

விக்கி மகேந்திரன் (சகோதரன்): (416) 276-6867