
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் இரத்தினசபாபதி அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம் சிவகாமி தம்பதிகளின் பாசமிகு மகளும், திரு. திருமதி அருணாசலம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும், சந்திரபாலன், சூரியபாலன், சூரியா, சந்திரா(யாழ். கேக் ஹவுஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், யோகராணி, தம்பிராஜா(அபிராமி அச்சகம்), காலஞ்சென்ற ரவி அகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான குணரெத்தினம், Dr. குலசேகரம், மற்றும் ராஜசேகரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், பத்மாவதி, ராஜபூபதி, காலஞ்சென்ற செல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி வள்ளியம்மை, கந்தையா பார்வதி, அரியம் பவளமலர் ஆகியோரின் சம்பந்தியும், சௌமியா, சுரேன், தனுஷன், சங்கர் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள்