- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை
Posted on by netultim2

திருமதி. செல்லம்மா சின்னத்தம்பி (புங்குடுதீவு – 12ம் வட்டாரம்)
ஓராண்டு நினைவஞ்சலி
பாசத்தின் முடிவு துன்பம் மறைந்தவர் முடிவு மாயம் மோசத்தின் முடிவு தோல்வி முயற்சியின் முடிவு வெற்றி நாசத்தின் முடிவு நன்மை நரகத்தின் முடிவு சொர்க்கம் ஆசையின் முடிவு ஏக்கம் அழுகையின் முடிவு ஞானம் கண்ணீர் விட்டழுதால் நெஞ்சில் கவலைகள் தீரும் கொஞ்சல் தண்ணீர் விட்டாலும் காய்ந்த பூங்கொடி தழைத்தல் போல வெண்ணீல மான கண்ணில் விழுகின்ற அருவியோடு உன்மீது கொண்ட பாசம் உள்ளத்தை வாட்டுதம்மா
பிறப்பிலும் அழுதேன் தாயின் இளப்பிலும் அழுதேன் வாழ்க்கைக் கிளப்பிலும் அழுதேன் ஒன்றிச் சேர்ந்தவர் சிலரால் சுற்ற மறைப்பிலும் அழுதேன் உள்ளே மனத்திலும் அழுதேன் ஊரார் இளப்பிலும் அழுவதெல்லாம் இது வரை அழுதுவிட்டேன் தாய்மையின் பிரிவை பெற்ற அந்த சேயவன் அறிவான் ஊமையின் துயரை அந்த ஊமையே அறிவான் இன்று தாயே நீ துணையாய் நின்று என் குலம் வாழ ஆசி இரங்கியே வேண்டுகின்றேன் இறைவனை தொழுது நின்று
உங்கள் நினைவுகளோடு எந்நாளும் வாழ்வோம் இது உறுதி மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்.