திருமதி. சிவபூசணி சச்சிதானந்தகுமாரன்

31ம் நாள் நினைவஞ்சலி

அன்னை மடியில் 29-09-1960 அம்மன் அடியில் 22-10-2016
திருமதி. சிவபூசணி சச்சிதானந்தகுமாரன் (எழுத்தாளர் "உமா சச்சதானந்தன்") வரங்காலைப் பிறப்பிடமாகவும், கனடாவில் 22 வருடம் வாழ்ந்து, துர்க்கை அம்பாளின் தாழினைக் சரணடைந்து விட்டார். காலஞ்சென்ற இராஜநாயகம் மகேஸ்வரி தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு தனலட்சுமியின் மருமகளும், அன்னார் சச்சிதானந்தகுமாரின் ஆருயிர் மனைவியும், சுகப்பிரியா, செந்தூரன், ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும். இலங்கைவாழ் புவனேஸ்வரன் ஞானாம்பிகையின் பெறாமகளும், சிவாபலன், கௌரீஸ்வரி, கிரிதரன், மகாலட்சுமி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும், கணேஸ்-உமா, கிருஸ்ணா-மைனா, குகன்-மாலா, மனு-ராதா, சசி-நாதன், மாயா-தயாளன், பத்மாவதி-மகாலிங்கம், மனோகரன்-மீனா, பேபி-சோதிநாதன், சுந்தரன், ஆனந்து, அனு~யா ஆகியோரின் மைத்துனியும், கனடாவாழ் பபா-பத்மா, பாபு-தட்~h, லலி-கேசவன், தயா-அருள், ரகு-குமுதா, இளங்கோ-கலா ஆகியோரின் 'உமா" அக்காவுமாவார். அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனை கார்த்திகை (26-11-2016) சனிக்கிழமை காலை 11:00 மணிமுதல் மாலை 3:00 மணிவரை 3300 McNicoll Ave. ஸ்காபரோவில் அமைந்துள்ள BABA Banquet Halls இல் நடைபெறும். அதனைத்தொடர்ந்து நடைபெறவிருக்கும் நினைவு அஞ்சலி, நினைவு உரைகள், நினைவு மலர் வெளியீடு மற்றும் மதிய போசனநிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு உற்றார், உறவினர், நண்பர்களை அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, முகநூல் மூலமாகவும் ஆறுதல், கூறியவர்களுக்கும், மலர்வளையங்கள் அனுப்பியவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்த நல் உள்ளங்களுக்கும் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவி;த்துக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

சச்சி (கணவர்)

(905) 497-1957, (647) 573-4906