திருமதி சின்னத்துரை செல்லமுத்து

மரண அறிவித்தல்

தோற்றம்:- 05-06-1928 - மறைவு:- 05-06-2017

யாழ் ஊரங்குணை குப்பிழான் ஏழாலையைப் பிறப்பிடமாகவும் கனடா ஏஜெக்ஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை செல்லமுத்து அவர்கள் 05-06-2017 அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதியின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும், டாக்டர் மாணிக்கவாசகர்(நியுசிலாந்து), காலஞ்சென்ற கெங்காதேவி காலஞ்சென்ற சந்திரசேகரம், பாலசுப்பிரமணியம், கணேசமூர்த்தி, கமலாதேவி, ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான பண்டிதர் இராசையா, பறுவதம், பொன்னம்மா, ஆகியோரின் அன்புச் சகோதரியும், சித்திரா, திருச்செல்வம்,ஞானமலர் (குஞ்சா) அருணா, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும், பார்த்திபன்-சாந்தி, நிறஞ்சன், ரஜீவன், சஞ்சீவன், சத்னா, வாகினி, தனுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும், சகானாவின் பாசமுள்ள பூட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் யூன் 10ம் திகதி, 2017 அன்று சனிக்கிழமை மாலை 5.00 தொடக்கம் 9.00 மணிவரையும் மறுநாள் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 தொடக்கம் மதியம் 1.30 வரையும் Chapel Ridge Funeral Home, located at 8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R 5G1 இல் பார்வைக்காக வைக்கப்பட்டு மதியம் 1.30 தொடக்கம் 3.30 மணி வரை அதே இடத்தில் கிரியைகள் நடைபெற்ற பின்னர் மாலை 4.00 மணிக்கு Highland Hills Crematorium, 12492, Woodbine Avenue Gormley, Ontario, L0H 1GO என்னும் இடத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
-தகவல் குடும்பத்தினர்தொடர்புகளுக்கு

பாலசுப்பிரமணியம் (மகன்) 416 996 5133
பார்த்திபன் (பேரன்) 416 985 5133
நிரஞ்சன் (பேரன்) 647 571 2371
வாகினி (பேத்தி) 647 721 5133
ரவீந்திரன் (மருமகன்- ஹொலன்ட்) 062 3769662