Posted on by netultim2

2ம் ஆண்டு நினைவஞ்சலி
திருமதி. கேமலதா விக்னராஜ்
யாழ்ப்பாணம் புதுச்செம்மணி வீதி, கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா அஜெக்ஸ் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கேமலதா விக்னராஜ் அவர்களி;ன் இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு மகளாய் அவதரித்து குடும்பத்தில் அமைதியை அணியாகக் கொண்டு இன்புடனே வாழ்ந்தவரே ஏற்றமுடன் இசைவுடனே கல்வியிலும் நாட்டம் கொண்டீர் பாசம் கொண்ட உங்கள் அன்புள்ளம் பணிவன்பு நிறைந்த உங்கள் இன்முகம் கட்டி அணைக்கும் உங்கள் நேசக் கரங்கள் கனிவோடு உச்சரிக்கும் வாயின் வார்த்தைகள் இவையெல்லாம் உங்கள் ஏற்ற தோர் இணையைத் தேடித் தந்தனவோ கற்ற கல்விக்கு எற்றதாய் கிட்டிய கனடா போஸ்ட் உத்தியோகம் கண்டீர்கள் கரம்பிடித்த காதல் கணவரின் வர்த்தக முயற்சியிலும் வடிகாலாய் நின்றீர்கள் புதுமனை புகுந்து ஆண்டொன்று கழிகையிலே பதறியழ வைத்து பூவுலகைத் துறந்தீரே பாதி வழியில் உங்கள் பயணம் நின்றது பற்றிப் பிடித்த காலனின் கயிறு உங்கள் கழுத்தில் வீழ்;ந்தது கொடுமைதான் கண்ணீரோடு கரைந்தன ஈராண்டுகள் காலமெல்லாம் உங்களுக்காகவே துயரத்தை தாங்கும் இதயம் கொண்டவர்களாக நாம் அனைவரும் உங்கள் நினைவோடுதான் என்றும் கனத்தோடு வாழ்வோம் தங்கள் நினைவால் வாடும் பாசமுள்ள அம்மா, அப்பா, அன்புக் கணவர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், மைத்துனர் மற்றும் பெறாமக்கள்.