Posted on by netultim2

திருமதி. கிருஸ்ணமாலா தவராஜா
31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும்
எம் வாழ்வில் இணைந்த அழகுத்தேவதையே
கண்ணை இமை காப்பது போல் பார்த்தீர் பாரிலெமை
எண்ணுதற்கரிய அன்புவைத்து விட்டு
விண்ணுலகு சென்று மறைந்திட்ட மாயமென்ன
நீரின்றிக் காயும் நிலம் போல் ஆனோம்
வேரின்றிப் போன விழுதுகளாய் தவிக்கின்றோம்
கைகோர்த்த கணவனும் இருபிள்ளைகளும்
உற்ற உடன்பிறப்புக்களும் கண்ணீர் சிந்தி நிற்க
அம்பிகையும் பெற்றோரும் தஞ்சமென அவரடி சென்றீரோ
மண்ணில் அழகுடன் மலர்ந்து,
எம் மனங்களில் நிறைந்திட்ட உந்தனை
கண்களில் வைத்து பூஜித்திடுவோம் காலமெல்லாம்
வானத்திலிருந்து எமைக் காத்திடுவீர் தாயே
எம்மை ஆறாத்துயரினில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட எங்கள் குடும்பத் தலைவியின் மறைவுச்செய்தி கேட்டு உடன் எங்கள் இல்லங்களுக்கு வந்து துயர் பகிர்ந்தோர் அனைவருக்கும், வெளிநாடுகளிலிருந்து வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு அனுதாபம் தெரிவித்தோருக்கும், பார்வையாளர் மண்டபம் வந்து அஞ்சலி செலுத்தியோருக்கும், இரங்கலுரை, தேவார திருமுறைப் பாடல்களை பாடியோருக்கும், கண்ணீர் அஞ்சலிகள், மலர்மாலைகள், மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும், இறுதிக்கிரியைகள் செய்த குருமாருக்கும், சகல வழிகளிலும் உதவி ஒத்தாசை செய்த அனைவருக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் மதியபோசனமும் 03-06-2017 சனிக்கிழமை அன்று 1380 Birch mount Road இல் அமைந்துள்ள கனடா கந்தசுவாமி கோவில் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்