திருப்பதி தேவஸ்தானம் மீது வழக்கு; சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு

திருமலை – திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், ஒரு வாரத்துக்குள் வழக்கு தொடரப் போவதாக, பா.ஜ., மூத்த தலைவர், சுப்பிரமணியன் சாமி அறிவித்துள்ளார்.

திருப்பதி,தேவஸ்தானம்,வழக்கு,Subramanian swamy,சுப்பிரமணியன் சாமி,பா.ஜ,B.J.P,BJP

ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள திருமலை – திருப்பதி

தேவஸ்தான நிர்வாகத்துக்கு எதிராக, ஏழுமலையான் கோவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர், ரமண தீட்சிதர், சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறினார்.

ஏழுமலையான் ஆபரணங்கள் மாயமானதாகவும், நிலவறையில் உள்ள பொக்கிஷங்களை எடுக்க, மடப்பள்ளியின் தரை தளத்தை தோண்டியதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

இந்நிலையில், இதுகுறித்து, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: திருமலை தேவஸ்தானத்தில், ஆந்திர மாநில அரசின் தலையீடு உள்ளது. புராதன கட்டட பாதுகாப்பு, தேவஸ்தான நிர்வாகத்தில் நடந்து வரும் அக்கிரமங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, மனு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தேன்.

அந்த பணி முடிவடைந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள், இது தொடர்பான மனுவை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.