- நீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்
- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
வட கிழக்கு மாநில சட்டசபை தேர்தல்களில் திரிபுரா, நாகலாந்தில் பாரதீய ஜனதா அதிக இடங்களை பெற்று முன்னணியில் உள்ளது.
திரிபுரா சட்டசபை தேர்தலில் நொடிக்கு நொடி முடிவுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி, பாஜக மாறி மாறி முன்னிலை வகிப்பதால் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக உள்ளன.
திரிபுரா மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று பிரச்சாரம் செய்தது பாஜக, அமைதி வளர்ச்சிக்காக மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்று இடது சாரி அமைப்புகள் பிரச்சாரம் செய்தன.
இன்று 59 தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்ட நிலவரப்படி திரிபுரா சட்டசபை தேர்தல் முடிவில் மாற்றம் வந்து கொண்டே இருக்கிறது. முதலில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னிலை வகித்த நிலையில் அடுத்த சுற்றில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றது.
வட கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.,வின் செல்வாக்கு வளர்ந்துள்ளதற்கு மோடியின் சாதனையே காரணம் என பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
திரிபுராவில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பெற்றுள்ளது. நாகாலாந்தில் பாரதீய ஜனதா கூட்டணி முன்னிலையில் உள்ளது.
மேகாலயாவில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
3 மாநில தேர்தல் முடிவுகள்: வெற்றி நிலவரம்
நாகாலாந்து(18/60)
என்பிஎப்- 11
பாஜக- 3
மற்றவை- 4
திரிபுரா(28/59)
பாஜக- 15
மார்க்சிஸ்ட்- 7
மற்றவை -6
மேகாலயா (34/59)
காங்கிரஸ்- 13
என்பிபி- 7
மற்றவை- 14
இந்தநிலையில் திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
வளர்ச்சி, முன்னேற்றத்துக்காக பாஜக வுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. திரிபுரா தேர்தல் முடிவுகள் மறக்க முடியாதவை. திரிபுராவிற்கு ஒரு நல்ல தகுதியுடைய அரசை வழங்குவோம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.