திமுக- மதிமுக இடையிலான கூட்டணி பேச்சில் இழுபறி

திமுக- மதிமுக இடையிலான கூட்டணி பேச்சில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இன்றைய பேச்சில் இவ்விரு கட்சிகளுக்கு இடையே முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்தவொரு முடிவும் ஏற்படவில்லை.

வைகோவும் அவர்களின் கட்சி நிர்வாகிகளும் இன்று திமுக தலைவர் ஸ்டாலினுடன் பேச்சு நடத்துவார்கள் என கூறப்பட்டது. ஆனால் முக்கிய பேச்சு எதுவும் நடக்கவில்லை.இன்றைய பேச்சில் விடுதலைசிறுத்தை , இந்திய கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீடு முடிந்தன.
மதிமுக தரப்பில் கூடுதல் தொகுதிகள் கேட்கப்படுவதால் திமுக தர்மச்சங்கடத்தில் இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் காலையில் இருகட்சிகள் இடையே கூட்டணி ஒப்பந்தம் ஆகி விட்டதாகவும், மதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் செய்திகள் பரவின.

ஆனால் சில நிமிடங்களில் மதிமுக பொது செயலர் வைகோ நிருபர்களிடம் பேசுகையில்: லோக்சபா தேர்தல், ஒருவேளை 21 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்கள் நடைபெற்றால் அந்த கூட்டணியில் திமுக, மதிமுக இடம் பெற்றுள்ளது. மதிமுக தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்கள் இன்று அறிவாலயம் வர முடியவில்லை. எனவே நாளை அவர்கள் வருவார்கள். தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது.எவ்வித சறுக்கலும் இல்லை. விரைவில் முடிவாகும் என்றார்.