- கிரண் மோரேவுக்கு கொரோனா: மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சோதனை
- இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு - 3 பேர் உயிரிழப்பு
- பொது செய்தி தமிழ்நாடு 'நீட்' பயிற்சியை மீண்டும் 25 ல் துவங்க உத்தரவு
- ஸ்ரீ ராம நவமி - ஏப்ரல் 21
- பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன

திமுகவின் கடந்த கால காவிரி துரோகமே இன்றைய நடைமுறை சிக்கலுக்கு காரணம்: தமிழிசை சவுந்தரராஜன்
திமுகவின் கடந்த கால காவிரி துரோகமே இன்றைய நடைமுறை சிக்கலுக்கு காரணம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”காவிரி பிரச்சினையில் மத்திய பாஜக அரசை குறைசொல்லும் ஸ்டாலின், மத்தியில் 18 ஆண்டுகள், தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக காவிரி பிரச்சினையை ஏன் தீர்க்கவில்லை?
சர்க்காரியா கமிஷன், பூச்சி மருந்து ஊழல் வழக்கில் தப்பிக்க வேண்டி அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் கட்டளைக்குப் பணிந்து காவிரி வழக்கை வாபஸ் வாங்கினார் அன்றைய திமுக முதல்வர் கருணாநிதி. நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை அரசு இதழில் 7 ஆண்டு காலம் தாமதம் ஆனபோது அமைதியாக ஆட்சியில் இருந்த திமுக, இன்று நடுவர்மன்ற தீர்ப்பை அமல்படுத்த ஆகும் தாமதத்தை குறைகூறுகிறது.
இறுதி தீர்ப்பில் உள்ள 12க்கும் அதிகமான சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள், விடைகாண முடியாத கேள்விகள் என பல தரப்பு விவாதங்களை கர்நாடக அரசு எழுப்பி உள்ள நிலையில் கூட்டாட்சி தத்துவத்தின் படி முறையான விவாதம் நடத்தி தீர்ப்பை சட்டமாக்கி செயல்படுத்துவது தானே ஜனநாயக நடைமுறை ஆக முடியும்.
இதை மறந்து மத்திய அரசை தினமும் குறைசொல்லும் திமுக செயல் தலைவர் அறிக்கை திமுகவின் கடந்த கால காவிரி துரோகமே இன்றைய நடைமுறை சிக்கலுக்கு காரணம் என்பதே உண்மை” என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.