திடீரென உதகை வந்து அவசரமாக சென்னை திரும்பிய ஓபிஎஸ்: பேரன், பேத்தியைக் காண வந்ததாக விளக்கம்

நான் எனது பேரன் மற்றும் பேத்தியைக் காணவே உதகை வந்தேன் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென உதகை வந்து, அவசரமாக சென்னை திரும்பினார். உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

ஞாயிற்றுக்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மற்றும் கட்சியினரை சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி காண முற்பட்ட போது எந்த கருத்தையும் தெரிவிக்காமல் சென்றார்.

”நான் எனது பேரன் மற்றும் பேத்தியை காண வந்தேன்” என்று மட்டும் கூறி விட்டு கிளம்பிச் சென்று விட்டார்.