தாயகத்தில் முன்னாள் போராளிகளுக்கும் விதவைத் தாய்மாருக்கும் உதவக் கூடிய கரங்கள் விரிய வேண்டும்

கடந்தவாரம் எமதுகதிரோட்டம் உலகெங்கும் பரந்துவாழும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைச் சென்றடைந்தது என்பதற்குச் சான்றாக பல கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இவற்றை நாம் எமக்குக் கிடைத்த பாராட்டுக்களாக நாம் பார்க்கவில்லை. மாறாக ஒரு சமூகக்கடமையின் ஆரம்பப் புள்ளியில் நிற்கின்றோம் என்பது மட்டும் எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தஒரு தர்ம கைங்கரியத்தில் அவ்வாறான சிந்தனை உள்ளவர்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள் ஆகும்.

கடந்த வாரத்தின் எமது கதிரோட்டத்தின் தலைப்பு “தனிநபர்களிடம் தங்கியுள்ளநிதிதாயகம் நோக்கிவிரியவேண்டும்”என்பதே. இந்தஆசிரிய தலையங்கத்தைப் படித்துவிட்டு பலர் மௌனமாகவே உள்ளார்கள். சிலர் நினைக்கலாம் “இது மிகவும் கடினமான வேலை”என்று. இன்னும் ஒருசாரார் நினைக்கலாம் “இது எமக்கு வேண்டாத வேலை” என்று. எமது வாசகர்களாகிய பலர், நண்பர்கள் மற்றும் “சமூக அக்கறையுடையவர்கள் நாங்கள்” என்று மார் தட்டிக் கொள்கின்றவர்கள் எல்லோரும் முன்னரைவிட மிக அதிகமாக மௌனம் சாதிக்கின்றார்கள். இவ்வாறான அவர்களது மௌனம் மேலும் மேலும் எமது சமூகத்திற்கு பாரிய நஸ்டங்களை ஏற்படுத்தலாம் என்பதை அவர்களை அறியவில்லைப் போலும்.

எவ்வாறிருப்பினும் நாம் இந்த கதிரோட்டத்தின் முதலாம் பந்தியில் குறிப்பிட்டுள்ள வண்ணம் ஒரு சமூகக் கடமையின் ஆரம்பப் புள்ளியில் நிற்கின்றோம் என்பது மட்டும் எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. இதுதான் உண்மை. புலம் பெயர்ந்த நாடுகளில், குறிப்பாக கனடாவிலும் நூற்றுக்கணக்கானவர்களிடம் தங்கியுள்ள இந்த நிதி தற்போது பல வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது நிதர்சனமான உண்மையே. இந்த  நிதியைச் சேகரித்தவர்களும் அவர்களே. அதற்கு பொறுப்பானவர்களும் அவர்களே. அந்தநிதிதொடர்பானஅனைத்து விடயங்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டியவர்களும் அவர்களேஆவார்கள். மற்றவர்கள் அறிந்தது மிகவும் குறைவானதே. நாமும் அந்த பிரிவையே சார்ந்தவர்கள் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.
எனவே மேலே கூறப்பட்டவண்ணம் ஏதாவது வர்த்தக நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் நிதியிலிருந்து கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியையாவது அனைவரும் எதிர்பார்க்கின்ற முன்னாள் போராளிகள் மற்றும் விதவைத்தாய்மார் போரினால் அங்கங்களை இழந்தவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்திற்கு பயன்படும் வகையில் கைகள் நீட்டப்படலாம் என்பதே எமது வேண்டுகோளாகும். இந்த வேண்டுகோளிற்கு பலதிசைகளிலிருந்தும் ஆதரவுக் குரலொலிகள் கேட்கும் என்றே எதிர்பார்க்கின்றோம்.

COMMENTS

  • Yes this is what i claim too,but non of the beneficiaries who are making millions in Canada are silent to help the needy people in Srilanka. One GOOD EXAMPLE IS ‘AMBIKA JEWELLERS’ WHO SPENT ENORMOUS AMOUNT ON SUPER SINGER COULD HAVE BUILT SOME HOUSES FOR THE WIDOWS INSTEAD OF JUST SPENDING ON THEIR OWN LAVISH LIFE.WHO,S MONEY IS THAT? THEY LEFT VAVUNIYA PENNILESS BUT MANAGING SOME ONE’S CASH.NOW THE TIME HAS COME TO ASK QUESTIONS THROUGH R,C.M. P .THIS IS ONLY A TIP OF THE ICE BERG. I HAVE STARTED TO DIG MANY MORE IN THE FUTURE IF THEY DO NOT HELP THE PEOPLE WHO GENUINLY FOUGHT FOR THE CAUSE

Comments are closed.