- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்
தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்
கனடாவில் நடைபெற்ற இறுதிக் கூட்டத்தில் உருக்கமான உரையை ஆற்றி விட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்ற வடக்கின் முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன்
கடந்த ஒரு வார காலமாக ஓய்வின்றி உங்கள் மத்தியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். (மிகவும் மோசமான இறுமல் அவரது உணர்வுபூர்வமான உரையை தடுக்க முயலுகின்றது) அவ்வாறு உடல் இளைக்கும் வண்ணம் நான் ஓய்வின்றி செயற்பட்டதால் வந்த வினைதான் இந்த இறுமல். ( நகைச்சுவையாகக் கூறுகின்றார்) எனினும் தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்.
இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கி;ழமையன்று மாலை ஸ்காபுறோவில் பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ள Pan Am உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரமாண்டமான இறுதிக் கூட்டத்தில் உருக்கமான உரையை ஆற்றி விட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் வடக்கின் முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சுமார் 600 பார்வையாளர்கள் கலந்து கொண்ட மேற்படிக் கூட்டத்தில் முதல்வரது உரை தனித்துவமாக அமைந்தது. பல சவால்களை தாயகத்தில் சமாளித்த வண்ணம் அங்கு அரசியல் தலைமைத்துவத்தை ஏற்று நடத்தும் அவருக்கு இங்கு பல சவால்கள் காத்திருந்தன என்பதே உண்மை. ஏனென்றால் இவ்வாறான ஒரு அரசியல் தவைரை இதற்கு முன்னர் அழைத்த அனுபவம் இல்லாத ஒரு “புதிய குழு” இங்கு அழைத்து அவரை “கசககிப் பிழிந்தது.
இவ்வாறான பல நெருக்கடிக்களுக்கு மத்தியில் பிரம்டன் மாநகர சபை மற்றும் மார்ககம் மாநகர சபை ஆகியவறறின் நிர்வாகத்தினரோடு பயனுள்ள ஒப்பந்தங்களை முதல்வர் செய்துள்ளமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அத்துடன் பிரம்டன் தமிழர் அமைப்பு வன்னியில் முள்ளந்தண்டு பாதிப்புற்ற முன்னாள் போராளிகளுக்காக சேகரித்த 45 ஆயிரம் டாலர்களை சேகரித்து வழங்கியிருந்தார்கள். அதுவும் பாராட்டுக்குரியதே.
இதே வேளை மறுபக்கத்தில் கனடாவில் இயங்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கனடிய தமிழர் காங்கிரஸ் அமைப்பும் தாயகத்திலிருந்து வடக்:கு கிழ்க்கு ஆகிய பிரதேசங்களிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கபபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை யும் மாகாண சபை உறுப்பினர்களையும் அழைத்து பல நிகழ்வுகளை சம காலத்தில் நடத்தினார்கள். இந்த அழைப்புகளுக்கு பின்னால் இருந்த சூட்சுமங்களை மக்கள் அறியாமல் உள்ளார்கள். அது மிகவும் கவலைக்குரியது..குறிப்பாக தாயகத்திலிருநது மேற்படி கனடாவில் இயங்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கனடிய தமிழர் காங்கிரஸ் அமைப்பும் அழைத்திருந்த பல அரசியல்வாதிகளில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு குருகுலராஜா தான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் ஒரு அன்பர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கையில் “முதல்வர் விக்னேஸ்வரன் யாழ்பபாணத்தில் மோசடிகள் பல செய்கின்றார்” என்று குறிபபிட்டுள்ளார்.
இவ்வாறு ஒரு முன்னாள் கல்வி அதிகாரி மற்றும் தற்போதைய கல்வி அமைச்சர் தனது முதலமைச்சர் தொடர்பான ஒரு குற்றச்சாட்டை கனடாவில் வந்து தெரிவிப்பதற்கு என்ன காரணம் உள்ளது என்று கேட்கின்றோம். இது தர்மத்திற்கு விரோதமான காரியம் என்பதை வடக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு குருகுலராஜா புரிந்து கொள்ள வேண்டும்.
நல்ல நோக்கங்களுக்காக கனடாவிற்கு வருகை தந்த முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களோடு ஒரு பனிப்போர் நடத்தவா இங்கு வடக்கு மாகாணத்திலிருந்து கல்வி அமைச்சரையும் சுகாதார அமைச்சரையும் அழைத்திருநதார்கள் என்ற கேள்வியையே நாம் இங்கு முன் வைக்கின்றோம்.
மேலும் பல விடயங்கள் இங்கும் கனடா உதயன் பத்திரிகையிலும் தொடரவுள்ளன.
சென்று வருக! முதல்வரே உங்கள் முதுமை உங்களுக்கு ஒரு பலம். உங்கள் அமைதி உங்கள் எண்ணங்களை வெளிச்சமாக வெளிக்கொண்டு வர உதவும்.
வாழ்த்துக்கள் உங்கள் எதிர்கால வெற்றிகளுக்காக!!
இது ஒன்றல்ல ,இரண்டல்ல எடுத்துச் சொல்ல.தமிழரை அழித்துக்கொண்டிருப்பது உண்மையில் தமிழினம் தான்.கடந்த வரலாறு கூறும் பாடம்.இது இன்றல்ல நேற்றல்ல ஆதிகாலம் தொட்டு வழக்கமாக நடந்தேறி வருகிறது.தொடரட்டும்.