- கிரண் மோரேவுக்கு கொரோனா: மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சோதனை
- இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு - 3 பேர் உயிரிழப்பு
- பொது செய்தி தமிழ்நாடு 'நீட்' பயிற்சியை மீண்டும் 25 ல் துவங்க உத்தரவு
- ஸ்ரீ ராம நவமி - ஏப்ரல் 21
- பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன

தான் இறந்துவிட்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை சுரேஷ் மேனன் விளக்கம்
சில மணி நேரங்களுக்கு முன்னர் இயக்குநரும், நடிகை ரேவதியின் முன்னாள் கணவருமான சுரேஷ் சந்திர மேனன் காலமாகிவிட்டதாக செய்திவெளியானது.
இந்நிலையில் தான் இறந்துவிட்டதாக வெளியாகிய செய்திகள் பொய்யானவை என சுரேஷ் மேனன் மறுத்துள்ளார்.”நான் செத்தெல்லாம் போய்விடவில்லை.நிம்மதியாக காபி குடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த செய்தி முற்றிலும் தவறு ” என சுரேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, தான் இறந்துவிட்டதாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறு. இந்த செய்தியை கேட்டவுடன் நான் என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். அப்போது அந்த முகம் என்னை பார்த்து சிரித்தது என்று கூறியுள்ளார். மேலும், அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்திற்காக அப்போது எடுக்கப்பட்ட ‘செல்பி’ புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு 4ஜி மற்றும் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் சுரேஷ் மேனன் நடித்து வருகிறார்.இன்று காலை மலையாளத்தில் புதுமுகம் என்ற படத்த இயக்கிய தீபன் என்பவர் காலமானார்.சுரேஷ் மேனன் தமிழில் அதே பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளதால்,இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.