- நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்
- நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!
- 142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
- இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!
- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா
ஆசிய கோப்பை ‘சூப்பர்-4’ சுற்றுப்போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்த தவான், ரோகித் சர்மா சதம் கடந்தனர். இவர்களின் அபார ஆட்டம் கைகொடுக்க இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த ‘சூப்பர்-4’ சுற்றுப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக், பகர் ஜமான் ஜோடி துவக்கம் தந்தது. இமாம் 10 ரன்களில் அவுட்டானார். குல்தீப் ‘சுழலில்’ பகர் (31) சிக்கினார். ஜடேஜா பந்தில் பாபர் ஆசம் (9) ரன் அவுட்டானார். பின், இணைந்த கேப்டன் சர்பராஸ், சோயப் மாலிக் ஜோடி சிறப்பாக விளையாடியது. பொறுப்புடன் செயல்பட்ட மாலிக் அரை சதம் எட்டினார். இந்த நேரத்தில் சர்பராசை (44) வெளியேற்றினார் குல்தீப். புவனேஷ்வரின் 42வது ஓவரில் ஆசிப் அலி இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார்.
பும்ரா ‘வேகத்தில்’ தொல்லை தந்த மாலிக் (78) ஆட்டமிழந்தார். சகால் பந்தில் ஆசிப் அலி (30) போல்டானார். ஷாதப் கானை (10) பும்ரா திருப்பி அனுப்பினார். பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்தது. நவாஸ் (15), ஹசன் அலி (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, சகால், குல்தீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.