தல அஜித்தின் சொதப்பல்கள்- ஸ்பெஷல்

தல அஜித் இன்று தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங். ரஜினியின் ஓப்பனிங் சாதனையையே வேதாளத்தில் முறியடித்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த 4 படங்களும் சூப்பர் ஹிட் தான், இந்நிலையில் இப்படி தமிழ் சினிமாவையே கலக்கி வரும் அஜித் தன் திரைப்பயணத்தில் சொதப்பிய தருணங்களை பார்க்கலாம்.

காதல் கோட்டைக்கு பிறகு வந்த சோகம்

அஜித் ஆரம்பத்திலேயே சுமாரான ஹிட் படங்களை கொடுத்து தான் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார், இவருக்கு ஆசை படம் பெரிய ஹிட் படமாக அமைந்தாலும், காதல் கோட்டை தான் மெகா ஹிட் படமாக அமைந்தது, பல பெண்களின் மனதை கொள்ளையடித்த அஜித் அடுத்து ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்த்தால் நேசம், ராசி, உல்லாசம், பகைவன், ரெட்டை ஜடை வயசு என ஒரே வருடத்தில் 5 தோல்வி படங்களை கொடுத்தார்.