தலைமைத் தேர்தல் ஆணையாளர்: திரு பொன் பாலராஜன் (கனடா, ரொறன்டோ)

திரு பொன் பாலராஜன் (கனடா, ரொறன்டோ). இவர் அத்தாட்சிப் படுத்தப்பட்ட கணினி கட்டமைப்புத் துறை நிபுணர். ஒன்ராறியோ மாகாண அரச நிறுவனமொன்றில் கணினி கட்டமைப்புத் துறை நிபுணத்துவ ஆலோசகராக பணிபுரிந்து வருபவர். தொலைக்காட்சி – வானொலி விமர்சகர். மற்றும் கலை நாடகத் துறை ஆர்வலர். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னை நாள் அவைத் தலைவரும் ஆவார்.

தலைமைத் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள்:

செல்வி லக்சுமி லோகதாசன் (அவுஸ்திரேலியா, சிட்னி). இவர் மேற்கு சிட்னி பல்கலைக் கழகத்தில் சட்டவியல் மற்றும் சர்வதேச கற்கையியல் துறைகளில் இறுதி ஆண்டு மாணவர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான இளைய தலைமுறை பெண் எனும் விருது பெற்றவர். அத்துடன் துணைவேந்தரின் தலைமைத்துவப் பரிசு, 2015 க்கான புதிய கொழும்புத் திட்டப் புலமைப் பரிசுகளும் பெற்றவர்.

திரு றோனி மறுசலீன் (பிரான்ஸ், பாரிஸ்);. இவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றுப் பின்னர் விரிவுரையாளராகவும் இருந்தவர். பிரான்ஸ் நாட்டில் நெடுங்காலமாக நன்கறியப் பட்ட சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார்.

பிரதமர் ருத்ரகுமாரன் அவர்கள் தனது அறிக்கையின் நிறைவாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அரசவைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறைகளில் தேர்தல் ஆணையத்தின் தனித்துவமானதும் சுதந்திரமானதுமான செயற்பாட்டுக்கு அனைவரது ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வேண்டியுள்ளார்.