தலைமன்னார் புனித லாரென்ஸ்ஷியர் திருக்கோவிலுக்கான வரவேற்பு வளைவை கிறிஸ்தவக்கிரமத்தின் புகுமுகவாயிலில் கட்டி பெருமையுறுவது நியாயமானதாகும்

ஜனநாயகமக்கள் முன்னணியின் பொது செயலாளர் கலாநிதி என்.குமரகுருபரன் ஆலோசனை

தலைமன்னாரில் கிறிஸ்தவ இந்து முஸ்லீம் மும்மதத் தமிழர்களும் ஒருவரை ஒருவர் எந்தவகையிலும் ஆக்கிரமிக்க எண்ணாது ஒருமைப்பாட்டுடன் பெருமையாய் வாழ்வதுதான் தமிழரின் கலாச்சார மிடுக்கை கொடுக்கும் . இதை பேண வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளரும் தமிழ் தேசிய பணிக்குழு தலைவருமான கலாநிதி என்.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தெ◌hடர்பாக அவர் ஊடகங்களுக்;கு விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்
இதுதொடர்பாக முத்துமாரி அம்மன் கோவில் பரிபாலன சபை செயலாளர் திரு பாலசுந்தரராஜா, எனக்கு நிலமையை விளக்கி இருந்தார், இந்துமாமன்ற தலைவர் சட்டத்தரணி நீலகண்டன் இன்று எம்மிடையே இல்லையே எனும் கவலையையும் மன்னர் இந்து மக்கள் என்னிடம் தெரிவித்திருந்தனர் , ஆயினும் மன்னார் இந்து மாமன்ற தலைமைத்துவம் மற்றும் அறங்காவலர்கள் செய்த போலீஸ் முறைப்பாட்டுடன் இன்று இடம்பெற்ற உயர் போலீஸ் அதிகாரிகள் பிரதேச செயலக அதிகாரிகள் கிறிஸ்தவ அமைப்பினர் கலந்து கொண்ட கொண்ட கூட்டமும் அமைதிக்கு வழிவகுக்கும் என நம்பமுடிகின்றது.இது தொடர்பாக தமிழர் நாம் மதத்தின் பெயரால் குழப்பத்தை ஏற்றப்படுத்தாது , அதன் மூலம் சமுதாயத்தை குழப்பும் இனவாத சக்திகளுக்கும் இடமளிக்காது நமக்குள் நாம் யதார்த்தமாய் எழக்கூடிய பிரச்சனைகளை தீர் த்துக்கொள்ள வேண்டும் . மன்னர் ஆயர் பீடமும் அனைவரையும் இணைத்து செயற்றப்பட வல்லமையுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் தலைமன்னாரில் கிறிஸ்தவ இந்து முஸ்லீம் மும்மதத் தமிழர்களும் ஒருவரை ஒருவர் எந்தவகையிலும் ஆக்கிரமிக்க எண்ணாது நிம்மதியாக வாழ வழி காட்ட வேண்டும் எனவும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொது செயலாளரும் தமிழ் தேசிய பணிக்குழு தலைவருமான கலாநிதி என்.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.மேலதிக தகவல்களுக்கு 0715637986 பரிபாலன சபை செயலாளர் திரு பாலசுந்தரராஜா,