தர்மதுரை விழாவுக்கு தமன்னா வராதது ஏன்?

விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டிடாங்கே நடிக்க, சீனுராமசாமி இயக்கத்தில் வெளியானபடம் –

‘தர்மதுரை’. இதன் 100-வது நாள் வெற்றிவிழா, சென்னையில் உள்ள கமலா தியேட்டரில்கொண்டாடப்பட்டது. ஸ்டுடியோ-9 நிறுவனம் சார்பில்ஆர்.கே.சுரேஷ் தயாரித்த இப்படத்தின் 100-வது நாள்விழாவில், அந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும்விநியோகஸ்தர்களும் பங்குபெற்றனர். ஆனால்தர்மதுரை படத்தின் கதாநாயகியான தமன்னா மட்டும் 100-வது நாள் விழாவுக்கு வரவில்லை.

என்ன காரணம் என்று தர்மதுரை படக்குழுவினரிடம் கேட்டபோது கடந்த காலத்தில்நடைபெற்ற கசப்பான சம்பவங்கள் தான் காரணம் என்கின்றனர். தர்மதுரை படத்தில்நடித்தபோது கால்ஷீட் சொதப்பினாராம் தமன்னா. படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்கிகொடுத்ததால் தமன்னா மீது கடுப்பாகிவிட்டார் தர்மதுரை தயாரிப்பாளர்கள். அதன் பிறகுபடம் வெளியான நேரத்தில் புரமோஷனுக்கு தமன்னாவை அழைத்தாராம் தயாரிப்பாளர். அப்போதும் அலட்சியப்படுத்தினாராம் தமன்னா. எனவே தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் தமன்னா மீது புகார் கொடுத்தார் அப்படத்தின் தயாரிப்பாளர். அதைமறக்காத தமன்னா அந்த கடுப்பில்தான் தர்மதுரை விழாவுக்கு வரவில்லை என்றுகோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்